தேங்காய் சட்னி சாப்பிடு இருப்பீங்க. தேங்காயை எண்ணெயில் நன்றாக வறுத்து அதில் சட்னி செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த சட்னியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வறுத்து அரைத்த தேங்காய் சட்னி
தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல் – ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – 4,
உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன்,
புளி, கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை :
* கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை வறுக்கவும்.
* இவை சற்று சிவந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்.
* நன்றாக ஆறியதும் அதனுடன் உப்பு, சிறிதளவு புளி சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக, நைசாக அரைத்து கொள்ளவும்.
* சூப்பரான வறுத்து அரைத்த தேங்காய் சட்னி ரெடி.
குறிப்பு: இது ரசம் சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. தண்ணீர் விடாமல் அரைத்தால், வெளியூர் பயணத்துக்கு புளி சாதம், இட்லி, தோசைக்கு சைட் டிஷ் ஆக உபயோகிக்கலாம். தேங்காய் துருவலை, பொன்னிறமாக, வாசனை வரும் வரை வறுக்க வேண்டியது அவசியம்.