23.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201702241519120695 Kondai kadalai kurma SECVPF
சைவம்

சூப்பரான கொண்டைக்கடலை குருமா

சப்பாத்தி, பூரிக்கு சூப்பரான சைடு டிஷ் கொண்டைக்கடலை குருமா. இன்று இந்த கொண்டைக்கடலை குருமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்

சூப்பரான கொண்டைக்கடலை குருமா
தேவையான பொருள்கள் :

கொண்டைக்கடலை – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 1
இஞ்சி – சிறிது
பூண்டு – 3 பற்கள்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கொத்துமல்லி இலை – ஒரு கொத்து
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்

அரைக்க :

தேங்காய் – 3 துண்டுகள்
கசகசா – 1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை – 1/4 டீஸ்பூன்

தாளிக்க :

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கிராம்பு – 1
பிரிஞ்சி இலை – 1
சீரகம் – கொஞ்சம்
பெருஞ்சீரகம் – கொஞ்சம்
முந்திரி – 5

செய்முறை :

* கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

* ஊறவைத்த கொண்டைக்கடலையை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து, வேக வைத்து, நீரை வடித்து வைக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* இஞ்சி, பூண்டை தட்டி வைக்கவும்.

* வெறும் வாணலியில் கசகசாவை லேசாக வறுத்து சிறிது சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். ஊறியதும் தேங்காய், பொட்டுக்கடலையுடன் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

* ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

* அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் கடலையை சேர்த்துக் கிளறிவிட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு, கடலை மூழ்கும் அளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.

* எல்லாம் நன்றாகக் கலந்து, சிறிது நேரம் கொதித்து, வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைக் குருமாவில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

* கொதி வந்து பிறகு எலுமிச்சை சாறு, கொத்துமல்லி தூவிக் இறக்கி பரிமாறவும்.

* இப்போது அருமையான, கொண்டைக்கடலை குருமா தயார்.

* இது பூரி, சப்பாத்தி, நாண், சாதம் இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.201702241519120695 Kondai kadalai kurma SECVPF

Related posts

கோவைக்காய் துவையல்

nathan

மிளகு பத்திய குழம்பு

nathan

சிம்பிளான புடலங்காய் பொரியல்

nathan

வறுத்தரைத்த மிளகு – பூண்டு குழம்பு செய்வது எப்படி

nathan

தேங்காய்ப் பால் சாதம்

nathan

வேர்க்கடலை குழம்பு

nathan

வெந்தயக்கீரை சாம்பார்

nathan

முளைகட்டிய பயிறு அகத்திக்கீரை சுண்டல்

nathan

பலாக்காய் குழம்பு செய்ய வேண்டுமா!

nathan