05 1478343218 loseskin
சரும பராமரிப்பு

சாதம் வடித்த கஞ்சியை எப்படி மிளிரும் சரும பெற உபயோகிக்க வேண்டுமென தெரியுமா?

அரிசி கஞ்சி பல வித நன்மைகளை நம் சருமத்திற்கு தருகிறது. உங்கள் சருமத்தை மிளிரச் செய்யும் குணங்கள் இந்த அரிசி கஞ்சியில் இருக்கிறது.

இந்த அரிசி கஞ்சியை எப்படி உபயோகித்தால் உங்கள் சரும பிரச்சனைகள் போகும் என்பது தெரியுமா? இல்லையென்றால் இதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எப்படி அரிசி கஞ்சியை தயாரிப்பது : அரிசியை நீரில் வேக வைத்து அந்த நீரை வடிகட்டி ஆற வையுங்கள். அந்த நீரை அப்படியே 1 நாள் முழுவதும் வைத்தால் அது புளித்துப் போகும். இந்த புளித்து போன நிலையில் நல்ல பேக்டீரியா பெருக வாய்ப்புகள் உண்டு. இது உங்கள் சருமத்திற்கு அட்டகாசமான பலனை தரக் கூடியது. இதில் மேலும் சிறிது நீர் சேர்த்து உபயோகிக்க வேண்டும்.

முகப்பருவிற்கு : வடித்த கஞ்சியில் சிறிது நீர் சேர்த்து நீர்த்த நிலையில் அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து முகத்தில் தடவினால், முகப்பருக்கள் மாயமாக மறைந்துவிடும்.

சுருக்கங்களுக்கு : சுருக்கங்களுக்கு இது சிறந்த சாய்ஸாகும். நுண்ணிய சுருக்கங்களையும் இந்த கஞ்சி போக்கிவிடும். தினமும் காலை மாலை உபயோகித்து பாருங்கள்.

பெரிய சரும துவாரங்களுக்கு : சருமத்தில் பெரிய துளைகள் இருந்தால் அதில் எளிதில் அழுக்கு இறந்த செல்கள் அடைத்து முகத்தை வயதான தோற்றம் கொடுத்துவிடும். இதனை தடுக்க இந்த வடித்த கஞ்சியை உபயோகிக்கலாம்.

கருமையை போக்க : கஞ்சியை முகத்தில் த்டவி 30 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் அழுவ வேண்டும். விரைவில் கருமை மறைந்து முகம் கழுத்து பளிச்சிடும்.

முகம் மெருகேற : முகம் மேடுபள்ளமாக தொய்வடைந்து காணப்படுகிறதா? இது சிறந்த வழி. அரிசி கஞ்சியை முகத்தில் த்டவி 15 கழித்து கழுவவும். இதனால் முகம் சீராகவும் சுத்தமாகவும் இருக்கும்.

முகம் இறுக : சிலருக்கு மத்திய வயதில் கன்னச் சதைகள் தொங்க ஆரம்பிக்கும். இதனை குணப்படுத்த அரிசி கஞ்சியை உபயோகித்தால் சருமம் இறுகி இளமையான முகத்தை பெறலாம்.

05 1478343218 loseskin

Related posts

முகத்தின் அழகை பராமரித்துக் கொள்ள இந்த டிப்ஸ படிங்க!…

sangika

எல்லோருக்குமே தங்கள் இளமை அழகைத் தக்கவைத்துக்கொள்ள ஆசை. அதற்காக என்னென்னவோ செய்கிறார்கள்.

nathan

இருக்கவே இருக்கு இயற்கை சன் ஸ்கிரீன்!

nathan

ஆபத்தா…! குளித்தவுடன் வியர்வை வருவது ஏன்?

nathan

வயதானலும் அழகை கூட்ட வழிகள்

nathan

பீச் பழம் எவ்வாறு சருமத்தைப் பாதுகாக்கும்?…

sangika

தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும்

nathan

சருமத்தை தூய்மையாக்கும் கிளிசரின்

nathan

பீட்ரூட் நமது உதட்டுக்கும் நன்மை செய்கிறது என்றால் நம்புவீர்களா?

nathan