25.5 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201702221147419133 Before marriage pregnancy SECVPF
மருத்துவ குறிப்பு

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

பெண்கள் சாதனைகளை நோக்கி வளர்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் போன்ற செயல்கள் அவர்களை மீண்டும் இருட்டில் கொண்டுபோய் தள்ளிவிடும்.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் டீன்ஏஜ் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கல்லூரிக்கோ, வேலைக்கோ செல்லும் பெண்கள் அங்கு தன் வேலை என்ன என்பதை மறந்து, காதலில் ஈடுபடுவதுதான் இந்த பரிதாபத்திற்கான முதல் அடியாக இருக்கிறது.

ஆழம் தெரியாமல் காதலில் காலை விட்டுவிட்டு தடுமாறும் பெண்களே கர்ப்ப கவலைக்கு உள்ளாகிறார்கள்.

பெண்களின் இளமைப்பருவம் கண்ணாடி போன்றது. சிறிய தவறு நேர்ந்தாலும் எதிர்காலம் சுக்குநூறாகிவிடும். பெண்கள், ஆண்களுக்கு சமமாக வளர்கிறார்கள். வாழ்கிறார்கள். அந்த ‘சமம்’ அவர்கள் அறிவை விசாலப்படுத்த வேண்டும். அதன் மூலம் தனக்கும்- தன் ஆண் நண்பனுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி தேவை என்பதை அவள் உணரவேண்டும். அந்த இடைவெளியை உருவாக்க தெரிந்த பெண்கள் மட்டுமே பிரச்சினைகள் இன்றி வாழ்கிறார்கள்.

பெண்கள் சாதனைகளை நோக்கி வளர்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் போன்ற செயல்கள் அவர்களை மீண்டும் இருட்டில் கொண்டுபோய் தள்ளிவிடும். ‘திருமணத்திற்கு பின்புதான் உடலுறவு’ என்ற பாரம்பரியத்தை முன்னோர்கள் வகுத்துவைத்திருக்கிறார்கள். அது பெண்மைக்கு மதிப்பும், மரியாதையும் பெற்றுத்தரும்.

பெற்றோர்களும், சமூகமும் பெண்களுக்கு சுதந்திரம் தந்துவிட்டன என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் இன்றைய இளைய தலைமுறையினர் சற்று நிதானித்து யோசிக்க வேண்டும். திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் தரும் வலியை சொல்லிமாளாது. அது கஷ்டம், குழப்பம், சிக்கல், அவமானம் போன்ற அனைத்தையுமே சேர்த்து தரும். அந்த வலியையும், அவமானத்தையும் பாதிக்கப்பட்ட பெண் மட்டுமல்ல, அந்த குடும்பமே சேர்ந்து அனுபவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான டீன்ஏஜ் பெண் ஒருத்தி என்னிடம் ஆலோசனைக்கு வந்தாள். கர்ப்பமாகி மூன்று மாதங்கள் கடந்திருந்தன. அதனால் ‘கருவை கலைக்க வாய்ப்பில்லை’ என்று நான் கூறிவிட்டேன். உடனே அவள் அம்மா என் காலைப்பிடித்துக்கொண்டு கதறியழுதார்.

ஒரு பெண்ணுடைய நட்பு கிடைத்துவிட்டால் அவளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு கைவிடும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. பெண்கள் தான் அப்படிப்பட்ட ஆண்களின் மனநிலையை புரிந்து கொண்டு கவனமாக இருக்கவேண்டும். ஒரு பெண்ணுடன் பழகி, அவள் கர்ப்பம் ஆகிவிட்டால் என்று தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட ஆண் கூடுமானவரை தப்பிக்கவே முயற்சி செய்கிறார்.

ஒரு சிலர் அந்தப் பெண்ணை கருக்கலைப்பிற்கு கட்டாயப்படுத்துகிறார்கள். மறுக்கும் பட்சத்தில் கொலை செய்யக்கூட துணிகிறார்கள். ஆனால் திருமணத்திற்கு மட்டும் யாரும் ஒத்துக்கொள்வதில்லை.

‘உன்னை திருமணம் செய்துகொள்ள என் பெற்றோர் சம்மதிக்கவில்லை’ என்று கூறிவிடுகிறார்கள். திருமணத்திற்கு முன்பு ஏற்படும் கர்ப்பத்தை தனி மனிதர்களும், சமூகமும் அவமானமாகவே கருதுகிறது. 201702221147419133 Before marriage pregnancy SECVPF

Related posts

குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் கவனத்திற்கு…!

nathan

மூலம் – நிர்மூலமாக்கும் சித்த மருந்துகள்

nathan

மருத்துவ உலகில் இந்த நிலையை `எரோட்டோமேனியா’ (Erotomania) என்கிறார்கள்….

sangika

மலச்சிக்கலால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது தெரியுமா?தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

சூப்பர் டிப்ஸ்! இருமலை சரிசெய்யும் வெற்றிலை துளசி சூப்

nathan

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியவை!

nathan

ஒரு குழந்தைக்கு நீரிழிவு நோய் உள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நீரிழிவு இருக்கும் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்!!!

nathan

பெண்களின் சில செயல்கள் ஆண்களின் உணர்ச்சிகளை அதிகரிக்கும்

nathan