28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
p22b1 19510
மருத்துவ குறிப்பு

ஸ்கூல் வேனை குழந்தைகள் சிரித்தபடி வரவேற்க இதெல்லாம் செய்யலாம்!

குழந்தைகளையும் பெற்றோர்களையும் பயமுறுத்தும் ஒரு வாகனம் ஸ்கூல் வேன்.

‘ஸ்கூல் வேன் வர இன்னும் 10 நிமிடங்கள் இருக்கு. சீக்கிரம் சாப்பிடுடா’ என்று அதட்டாத வீடுகள் இல்லை. ஆனால், பிள்ளைகள் ரொம்ப சாவகாசமாக. ‘அம்மா… சப்பாத்தி குருமா நல்லாவே இல்லை’னு புகார் பட்டியல் வாசிப்பார்கள். அதைக் கேட்டதும் அம்மா முறைப்புடன் ‘இருக்கிறதைச் சாப்பிடு’ என ஊட்டிவிடுவார்கள்.

இந்த உரையாடல்கள் நடந்துகொண்டிருக்கும்போதே, 10 நிமிடங்கள் கரைந்து வாசலில் ஸ்கூல் வேனின் ஹாரன் காதைத் துளைக்க ஆரம்பிக்கும். அவசர அவசரமாக சாக்ஸ், சூ அணிந்துகொண்டு ஓடினால், ‘இன்னைக்கும் லேட்டா’ என்பார் டிரைவர். இன்னும் கொஞ்சம் லேட் பண்ணினால் ஸ்கூல் வேன் நம் வீட்டைக் கடந்து தெரு முனைக்குச் சென்றிருக்கும். இது ஒருபுறம் என்றால், தொடக்க வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளை ஸ்கூல் வேனில் ஏற்றுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அவர்கள் அழுவதைப் பார்க்கும்போது, ‘இன்றைக்கு பள்ளிக்கு அனுப்பாமல் விட்டுவிடுவோமா?’ என்று பெற்றோர்களே ஒரு நிமிடம் யோசிப்பார்கள். பிறகு பள்ளியில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது என்பதால், ஆயிரம் சமாதானம் சொல்லி வேனுக்குள் ஏற்றிவிடுவார்கள். இந்தப் பழக்கம் பெரிய வகுப்புகளுக்குப் போனாலும் பிள்ளைகளை விட்டுவிலகுவது இல்லை. சிரிப்புடன் பேசிக்கொண்டிருக்கும் பிள்ளைகள்கூட, ஸ்கூல் வேன் சத்தம் கேட்டவுடன் முகம் சுருக்கிக்கொள்வார்கள். இவர்களைச் சந்தோஷத்துடன் ஸ்கூல் வேனை வரவேற்க என்ன செய்யலாம்?

* ஸ்கூல் வேன் என்றாலே குழந்தைகளுக்கு அலர்ஜியாவதற்கு முதல் காரணம், அவசரம் அவசரமாக புறப்பட வேண்டும் என்பதே. இதற்கு காலையில் தாமதமாக எழுந்திருப்பதே காரணம். அதனால், முந்தைய நாள் இரவே சீக்கிரம் உறங்கவைத்து, காலையில் சரியான நேரத்தில் எழுப்பிவிடலாம்.

* தெரு முனையில் ஸ்கூல் வேன் நுழையும்போது, நிச்சயம் ஹாரன் அடிப்பார். அந்தச் சத்தம் கேட்டுத்தான் குழந்தையின் முகம் சுணங்கிவிடுகிறது. அதையே கொஞ்சம் மாற்றினால், அந்த ஹாரன் அடித்ததும் உங்கள் வீட்டு ஜன்னல் அருகே உங்கள் பிள்ளையோடு நின்றுகொள்ளுங்கள். அந்த ஹாரன் சத்தம் கேட்டதும் 1,2,3,4,5…. என எண்ணுங்கள். எந்த எண் சொல்லும்போது உங்கள் வீட்டுக்கு முன் ஸ்கூல் வேன் வருகிறது எனக் குறித்துக்கொள்ளுங்கள். அடுத்த நாள், அதேபோல, ஹாரன் சத்தம் கேட்டதும் இருவரும் ஜன்னலிருந்து பத்தடி தூரம் இடைவெளிவிட்டு நின்றுகொள்ளுங்கள். எண்களை வாய்விட்டுச் சொல்லத் தொடங்குங்கள். நேற்றுபோலவே அந்த எண் வரும்போது, யார் ஓடிச்சென்று முதலில் ஜன்னலின் திரைச்சீலையைத் திறக்கிறார்கள் எனப் பந்தயம் வைத்துக்கொள்ளுங்கள். வேண்டுமென்றே பிள்ளையிடம் தோற்றுப்போங்கள். அந்த வெற்றியின் சிரிப்போடு ஸ்கூல் வேனை நோக்கி ஓடுவார்கள்.

* கதைக் கேட்கும் விருப்பம் உள்ள குழந்தைகளுக்குப் புது ஐடியா ஒன்றைப் பின்பற்றலாம். காலையில் சாப்பிடும்போது ஒரு கதைச் சொல்லத் தொடங்குங்கள். ஸ்கூல் வேன் வரும்வரை அந்தக் கதை நீளட்டும். ஸ்கூல் வேன் வரும் அந்த நிமிடத்தில் கதையின் முடிவு அல்லது சஸ்பென்ஸோடு நிறுத்துங்கள். மாலையில் கதையின் முடிவைச் சொல்வேன் எனக் கூறுங்கள். கதையின் சுவாரஸ்யத்துடன் ஸ்கூல் வேனில் ஏறிக்கொள்வார்கள். அந்தக் கதையை நண்பர்களுக்கும் சொல்லக்கூடும்.

* ஸ்கூல் வேன் டிரைவரிடம் நன்கு பழகிவிடுங்கள். அவரிடம் வாரந்தோறும் ஐந்து பரிசுகளைக் கொடுத்துவிடுங்கள். பரிசுகள் விலை குறைந்ததாக, சின்னப் பரிசுகளாக இருக்கலாம். காலையில் ஸ்கூல் வேனில் உங்கள் பிள்ளை ஏறியதும் டிரைவர் ஒரு பரிசைத் தருவார். அவர் என்ன பரிசுத் தருவார் எனும் ஆவலில் உற்சாகமாக ஸ்கூல் வேனை எதிர்நோக்குவார்கள்.

* தினந்தோறும் ஒரு விளையாட்டு விளையாட்டலாம். அதுவும் ஸ்கூல் வேனை மையமாக வைத்து, வீட்டு வாசலில் ஸ்கூல் வேன் வந்து நிற்கும் அல்லவா. ஸ்கூல் வேன் வருவதற்கு முன் தெருவில், வேனின் முன் சக்கரங்கள் எந்த இடத்தில் நிற்கும் என்பதை யூகிக்கும் விதத்தில் சிறியதாக கோடு போடுங்கள். அதேபோல உங்கள் பிள்ளையையும் ஒரு கோடு போடச் சொல்லுங்கள். யாருடைய கோடுகள் அருகே வேனின் முன் சக்கரங்கள் நிற்கின்றனவோ, அவர் விளையாட்டில் வெற்றிப் பெற்றவர். நீங்கள் தோற்றால் ஏதேனும் பரிசு கொடுங்கள். பணமாக கொடுத்தால் அதை பாக்கெட் மணியோடு சேர்த்து வைக்கச் சொல்லுங்கள். பிள்ளை தோற்றால் முத்தத்தை அன்பு பரிசாகப் பெறுங்கள்.
p22b1 19510

Related posts

நீங்க லேட் நைட் தூங்கற ஆளா … அப்ப இத படிங்க!

nathan

ஹைப்போ தைராய்டு இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

இதோ எளிய நிவாரணம்! தோள்பட்டை, கழுத்து வலியை போக்கும் பயிற்சிகள்

nathan

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !!

nathan

பச்சிளம் குழந்தைக்கு ஒரு நாளைக்கு தாய் எத்தனை முறை, எந்த அளவு பாலூட்ட வேண்டும்?தெரிந்துகொள்வோமா?

nathan

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இதோ சில வழிகள்! !

nathan

அட! தாலியில் மஞ்சள் கோர்த்து கட்றதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா?.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…’அங்க’ ரொம்ப அரிக்குதா? அதுக்கு இதெல்லாம் தான் காரணம்!

nathan

வயிற்றுகோளாறை சரிசெய்யும் சுக்குமல்லி பானம்

nathan