29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201702151346300113 dont doing this after eating SECVPF
மருத்துவ குறிப்பு

சாப்பிட்ட உடன் கண்டிப்பாக செய்ய கூடாதவை

சிலர் சாப்பிட்டவுடன் புகைபிடிப்பது, காபி குடிப்பது போன்ற சில செயல்களில் ஈடுபடுவார்கள். சில பழக்கங்களை சாப்பிட்ட உடனே கண்டிப்பாக செய்யக்கூடாது. அவை என்னவென்று பார்க்கலாம்

சாப்பிட்ட உடன் கண்டிப்பாக செய்ய கூடாதவை
சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் – அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.

10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

* அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.

* எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

* சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேயிலைத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

* சாப்பிட்ட பின்பு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

* சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.

* சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் – ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்கின்றனர்.

* நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.

* மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.201702151346300113 dont doing this after eating SECVPF

Related posts

விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்!பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இதோ எளிய நிவாரணம்! ஆண்களின் மார்பு பகுதியில் வரும் வலிமிக்க பருக்களைப் போக்கும் எளிய வழிகள்!

nathan

பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட காரணங்கள்

nathan

ஆரோக்கியமான இதயத்துடன் வாழ

nathan

சளியை எளிதாக வெளியேற்றனுமா? மருத்துவர் கூறும் தகவல்கள்…

nathan

வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்னைகள் என்ன?

nathan

இதோ படர்தாமரை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் சில சூப்பர் டிப்ஸ் !

nathan

சிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில் -தெரிஞ்சிக்கங்க…

nathan