29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
Boondi Laddoo
இனிப்பு வகைகள்

பூந்தி லட்டு

என்னென்ன தேவை?

கடலைமாவு – 4 கப்,
சிவப்பு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை,
பச்சை ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை,
காய்ந்த திராட்சை – 8,
பொடித்த முந்திரி – 10,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்,
ரோஸ் வாட்டர் – 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை – 4-6 கப்,
தண்ணீர், பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடலைமாவை சல்லடையால் சலித்து தண்ணீர், 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கட்டியில்லாமல் விட்டு சரியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இக்கலவையை மூன்று பாகமாகப் பிரித்து, சிவப்பு, பச்சை ஃபுட் கலர் சேர்த்து தனித்தனியே பிரித்து வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பூந்திக் கரண்டியை வைத்து மற்றொரு கரண்டியில் மாவைத் தேய்த்து பொரித்தெடுக்கவும். இப்படித் தேய்ப்பதால் பூந்திகள் சமமாக விழும். இதே போல் சிவப்பு, பச்சை கலர் பூந்திகளை பொரித்தெடுக்கவும். மற்றொரு கடாயில் நெய் விட்டு பொடித்த முந்திரி, காய்ந்த திராட்சையை வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கம்பிப் பதம் வரும்வரை காய்ச்சி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் முந்திரி, திராட்சை, பூந்தி, ஏலக்காய்த்தூள், ரோஸ் வாட்டர் அனைத்தையும் கலந்து, மெதுவாக இளம்சூடான சர்க்கரை பாகை கலந்து லட்டுகளாக பிடித்து பரிமாறவும்.
Boondi Laddoo

Related posts

பால் பணியாரம்

nathan

பயற்றம் உருண்டை// பயற்றம் பணியாரம்..

nathan

பிரட் ஜாமூன்

nathan

ஸ்பெஷல் லட்டு

nathan

கடலை மாவு பர்பி

nathan

ஆப்பிள் அல்வா

nathan

தித்திப்பான சேமியா கேசரி செய்வது எப்படி

nathan

ருசியான ரச மலாய் எப்படி செய்வது?

nathan

நவராத்திரி ஸ்பெஷல் வேர்க்கடலை வெல்ல லட்டு

nathan