25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
p46a
மருத்துவ குறிப்பு

வாயு தொல்லையை போக்கும் பெருங்காயம்

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பெருங்காயத்தின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உணவுக்கு வாசனை, சுவை சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படுவது பெருங்காயம். மணம் மிகுந்த இதை உணவில் சிறிது சேர்க்கும்போது, வாயுவை வெளியேற்றும். வீக்கத்தை கரைத்து வலியை குறைக்க கூடியதாக விளங்குகிறது. நுண்கிருமிகளை போக்கும் தன்மை உடையது. தலைவலி, உயர் ரத்த அழுத்தத்தை தடுக்க கூடிய அற்புத மருந்தாக பெருங்காயம் விளங்குகிறது. நெஞ்சக சளியை கரைத்து வெளித்தள்ளும். இருமலை போக்க கூடியது.

பெருங்காயத்தை பயன்படுத்தி மாந்தத்தை சரிசெய்து பசியை தூண்டும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பெருங்காயம், மிளகு, திப்பிலி, சுக்குப்பொடி, சீரகம், உப்பு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் 10 மிளகு, 5 திப்பிலி, சிறிது சீரகம் எடுத்து தட்டி போடவும். இதனுடன் சிறிது பெருங்காய தூள், சுக்குப்பொடி, உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
இதை வடிக்கட்டி உணவுக்கு பின் குடித்துவர குடிப்பதால் வாயு தொல்லை நீங்கும். வயிறு உப்புசம், மாந்தம், செரியாமை, வயிற்று வலி பிரச்னை குணமாகும். பெருங்காயம் ரத்த அழுத்தத்தை குறைத்து உள் உறுப்புகளை தூண்ட கூடியது. கணையத்தை நன்கு இயங்க துணைபுரிகிறது.

பெருங்காயத்தை கொண்டு ஒற்றை தலைவலிக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு டம்ளரில் வெந்நீர் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் பெருங்காயம், உப்பு, அரை எலுமிச்சை பழச்சாறு சேர்க்கவும். இவற்றை கலந்து உணவுக்கு பின் குடித்துவர ஒற்றை தலைவலி சரியாகும். கடுமையான தலைவலி, வாந்தி, நடுக்கம், எரிச்சல் போன்றவற்றுக்கு காரணமான ஒற்றை தலைவலி இல்லாமல் போகும். ரத்தம் அழுத்தம் சமன்படும். குழந்தைபெற்ற தாய்மார்களின் வயிற்றில் அழுக்குள் தங்காமல் இருப்பதற்கான மருந்து தயாரிக்கலாம். 2 பல் பூண்டு நசுக்கி எடுக்கவும். கால் ஸ்பூன் பெருங்காயம், நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து காலையில் சாப்பிட்டுவர கருப்பையில் அழுக்குகள் சேராமல் வெளியேறும். அழுக்கள் வெளியேறாமல் இருந்தால் காய்ச்சல் ஏற்படும். பாதுகாப்பான மருந்தாக இது விளங்குகிறது.

பெருங்காயத்தை பயன்படுத்தி காது வலிக்கான சொட்டு மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விடவும். இதனுடன் பெருங்காயப்பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை வடிகட்டி ஆறவைத்து காதில் ஓரிரு சொட்டுகள் விடுவதன் மூலம் காதுவலி விரைவில் சரியாகும். பெருங்காயம் வலி நிவாரணியாக விளங்குகிறது. பூஞ்சை காளன்களை போக்கும் தன்மை கொண்டது. நோயை விலக்க கூடியது. மலச்சிக்கலை போக்கவல்லது. தூக்கத்தைவரவழைக்க கூடியது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. கருப்பை வலி, வீக்கம், அழற்சியை போக்கி மாதவிலக்கு கோளாறை சரிசெய்கிறது. கொழுப்பு சத்தை குறைக்க கூடியது. உணவில் இதை அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லது. பல் வலிக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். லவங்கம் ஒரு ஸ்பூன் எடுத்து பொடித்து நீரில் இட்டு காய்ச்சி அதிலிருந்து வரும் புகையை பற்களில் படும்படி காட்டுவதால் பல் வலி விலகிப்போகும். இந்த நீரில் உப்பிட்டு வாய்கொப்பளித்தால் பல் சொத்தை, ஈறு வீக்கம், ரத்தகசிவு சரியாகும்.
p46a

Related posts

உடல் சிலிம் ஆக வேண்டுமா??? —இய‌ற்கை வைத்தியம்

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கர்ப்ப கால நீரிழிவு பற்றி உண்மைகள்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாய்ப்பாலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றித் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா புற்றுநோய் வர உண்மையான காரணம் இதுதான்!

nathan

ஒரு முறை உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா?

nathan

உங்கள் மனைவியின் டென்ஷன் குறைக்கும் ‘இரண்டு மந்திரங்கள்’ என்ன தெரியுமா?

nathan

சிறுநீரக கற்கள் கரைய செய்யும் ஓர் அற்புத மூலிகை முயன்று பாருங்கள்!

nathan

நீங்கள் சர்க்கரை வியாதியால் அவதிப்படுகின்றீா்களா இல்ல வராம தடுக்கனுமா? அப்ப இத படிங்க!

nathan

மார்பில் சுரக்கும் மாமருந்து!

nathan