நம்மை அழகு படுத்தவோ அல்லது சரும பிரச்சனைகளை சரிபண்ணவோ அடிக்கடி கடைகளிலோ அல்லது பார்லரிலோ சென்று அழகு படுத்திக் கொள்வதை விட எப்போதும் வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டு சரும பாதிப்புகளை சரி செய்யலாம்.
வேலைகளுக்கு நடுவே அவ்வப்போது சில நிமிடங்களில் உங்கள் அழகை பிரச்சனையை சரிபப்டுத்திம் கொள்ளலாம். நேரமும் குறைவு. பலனோ அற்புதம். எவ்வாறு என பார்க்கலாம்.
கிராம்பு நீர் :
தேவையானவை :
நீர் – அரை லிட்டர்
கிராம்பு – 7
கற்பூரம் – 1 சிட்டிகை
புதினா இலை – ஒரு கைப்பிடி
செய்முறை :
நீரில் கிராம்பு கற்பூரம் , புதிய புதினா இலைகளை போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வையுங்கள். பின்னர் ஆற வைத்து வடிகட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட வேண்டும். இந்த நீரை தினமும் காலை மாலை எடுத்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவுங்கள். எண்ணெய் வழியாது. முகப்பரு மறையும். முகம் பளபளப்பாகும்.
பாதாம் பொடி :
பாதாம் பொடியுடன் உருளைக் கிழங்கு சாறை கலக்கி முகத்தில் தடவுங்கள். இதனால் சருமத்தில் இறந்த செல்கள் அழுக்குகள் மறைந்து முகம் பளபளக்கும். பலவித பலன்களை அளிக்கக் கூடியது. முயன்று பாருங்கள்.
வெள்ளரிக்காய் :
வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு மிகவும் தேவைப்படும். வெள்ளரிக்காய் சாறு எடுத்து இரவு தூங்கப்போகுமுன் பூசி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்தால் அன்றையா நாள் முழுவதும் சேர்த்த அழுக்கு, இறந்த செல்கள் எல்லாம் அகன்று, உங்கள் சருமத்தை லேசாக்கும். வெளுக்கச் செய்யும். சுத்தமான சருமத்தை தரும்.
முட்டை மற்றும் மைசூர் பருப்பு :
முட்டையின் வெள்ளைக் கருவுடன் மசூர் பருப் பொடி மற்றும் பால் கலந்த் முகத்தில் மாஸ்க் போல் போடவும் நன்றாக இறுகிப் பிடிக்கும்போது கழுவ வேண்டும்.