29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
எடை குறைய

கண்டபடி சாப்பிட்டா எடை கட்டுக்குள் வராது

 

Description:

t22

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று டயட்டில் இருப்பவர்கள் வீட்டில் அதற்கேற்ப உணவுகள் உட்கொள்கின்றனர். அதேசமயம் விருந்து, விழாக்களுக்கு செல்லும் அவர்கள் அங்குள்ள உணவுகள், ஐஸ்கிரீம், சாக்லேட் என ஒரு பிடி பிடிக்கின்றனர். இதனால் உடல் எடை கட்டுக்குள் வராமல் போகிறது. உண்மையிலேயே உடல் எடை குறைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் வாயைக் கட்டுப்படுத்தினாலே எடை தானாக குறையும் என்று கூறியுள்ளனர். அவர்களின் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.

கொழுப்பு உணவுகள்

உங்களுக்கு எதை உண்ணப் பிடிக்குமோ, அதைத் தவிருங்கள். இது கொஞ்சம் கஷ்டம்தான். முதல் நான்கு நாட்கள் மிக கடினம் போல தோன்றும். முழுமையாகத் தவிர்க்க முடியாவிடினும், சிறிது சிறிதாகத் தவிர்க்கப் பாருங்கள். முழுமையாகத் தவிர்த்தபின் உங்கள் ஆர்வம் குறையத் தொடங்கியிருப்பதை நீங்களே உணர்வீர்கள்!. கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் முன் உங்கள் எடையையும் உடலையும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள். கொழுப்பு நீக்கப்பட்ட பாலை உபயோகிக்கவும்.

தியானத்தால் திசை திருப்பலாம்

தீனி உண்ணும் எண்ணம் பத்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. எனவே அந்த பத்து நிமிடங்கள் உங்கள் மனத்தை பாட்டு கேட்பதன்மூலமோ, உடற்பயிற்சி செய்வதன் மூலமோ அல்லது தியானம் மூலமோ திசை திருப்பலாம். எப்போதும் வாய் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். தேவையெனில் மவுத்வாஷ் உபயோகிக்கலாம். வாய் – சுத்தமாக இருக்கும்போது, கண்டதை உண்ணும் எண்ணம் தோன்றாது.

உடல் தளர்ச்சியின்போது உண்ணும் எண்ணம் தோன்றலாம். அச் சமயங்களில் கதவை அடைத்து, கண்களை மூடி ரிலாக்ஸ் செய்யுங்கள். குறிப்பாக சமையலறை பக்கம் போகாமல் ஏதாவது வேலைகளில் ஈடுபடலாம்!.

மூச்சுப் பயிற்சி

மூச்சுப் பயிற்சி செய்வதன்மூலம் மன இறுக்கத்தைப் போக்கலாம். மன இறுக்கம்கூட அதிகப்படியான உணவு உண்பதற்கு ஒரு காரணம். மன அழுத்தம்கூட உடல் எடை கூட காரணமாகலாம். உடற்பயிற்சியின்போது சுரக்கும் எண்டோர்ஃபின் என்னும் ஹார்மோன் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றது. மேலும் டிரிப்போஃபேன் என்னும் அமினோ அமிலம் நிறைந்த சோயா மற்றும் பால் பொருட்களும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சியின் அவசியத்தைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. உடலின் ஆரோக்கியத்திற்கும், இளமைக்கும் உடற்பயிற்சி தேவையான ஒன்று. இதற்கென தனியே நேரம் செலவிட இயலாவிடினும் வீட்டுவேலை, படியேறுதல் மற்றும் தோட்டக்கலை போன்றவற்றில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதே, சிறந்த உடற்பயிற்சியாகும். இவை உடலின் எண்ணற்ற கலோரிகளை குறைக்கின்றன.

எண்ணத்தை மாற்றுங்கள்

உலர் பருப்புகள் உடலுக்கு நல்லதல்ல என்ற தவறான எண்ணம் உண்டு. தினமும் சிறிதளவு உலர் பருப்புகள் எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்கும் என்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. எனவே தினசரி 25 கிராம் நட்ஸ் (பாதாம், நிலக்கடலை, வால்நட் மற்றும்) இரண்டு தம்ளர் தண்ணீர் சாப்பிடலாம். இருபது நிமிடங்களில் தீனி உண்ணும் உங்கள் எண்ணத்தை மாற்றிவிடும். பசிக்கும் போதெல்லாம், பப்பாளி, வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றை சலாட் செய்து சாப்பிட்டு, ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால் நாளடைவில் உடல் எடை குறையும்.

விருந்து உணவுகள்

திருமணம், பிறந்தநாள் போன்ற விருந்துகளைக் கட்டாயம் தவிர்க்கவும். ஒரு வேளை, மிக அவசியமான விருந்து நிகழ்ச்சி என்றால், காய்கறி, கீரை சூப் என பாதி வயிறு சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். இதனால் ஐஸ்க்ரீம், ஸ்வீட்ஸ் என கண்டபடி சாப்பிடத் தோன்றாது. எனவே மனதளவில் உணவுகளை கட்டுப்படுத்தினாலே உடல் எடை தானாக குறையும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

Related posts

தொடை கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்!

nathan

உடல் எடை குறைய வேண்டுமா ? சிம்பிள் டயட் ..

nathan

இதோ வந்தாச்சு ஒயிட் டீ உடல் எடையை குறைக்க!! எப்படி தயாரிப்பது?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உடலில் கொழுப்பை குறைக்க இந்த உணவுமுறைகளை கடைபிடிங்க

nathan

அழகான உடலமைப்பை பெறவேண்டுமா?azhagu kuripugal

nathan

உடற்பயிற்சியும், டயட்டும் இல்லமால் எடையை குறைப்பது எப்படி?..

sangika

எடையை ஒரே மாதிரி பராமரிப்பவர்களுக்கான‌ 7 நாட்கள் உணவுமுறை திட்டம்

nathan

உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து தொப்பையை குறைக்க சிறந்த வழிகள்!…

sangika