வயிற்று கோளாளு, அஜீரணம் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த சீரகம் – தனியா சூப் மிகவும் நல்லது. இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பசியை தூண்டும் சீரகம் – தனியா சூப்
தேவையான பொருட்கள் :
சீரகம் – கால் கப்
தனியா (மல்லி) – கால் கப்
இஞ்சி – சிறிய துண்டு
மிளகு – 2 ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் – 2
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
உப்பு – தேவைக்கு
செய்முறை :
* இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.
* எலுமிச்சை பழத்திலிருந்து சாறு பிழிந்து வைக்கவும்.
* தனியா (மல்லி), சீரகம், மிளகை சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
* ஊறவைத்த பொருட்களுடன் கறிவேப்பிலை, இஞ்சி, சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த இந்த விழுதுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்த பின் வடிகட்டி சக்கையை எடுத்து விடவும்.
* வடிகட்டிய கரைசலை அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும் இறக்கவும்.
* கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து சூடாக பரிமாறவும்.
* இந்த சூப் பசியை தூண்டும். உணவு நன்று செரிமானம் ஆகும். இந்த சூப் கெட்டியாக இருக்காது. கெட்டியாக வேண்டுமானால் சோளமாவு சேர்த்து கொள்ளலாம்.