27.6 C
Chennai
Friday, Aug 15, 2025
கூந்தல் பராமரிப்புதலைமுடி அலங்காரம்

கலரிங் செய்த முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!

tamil beauty

தற்போது வெள்ளை முடி அதிகம் வருவதால், பலர் அதனை மறைப்பதற்கு கலரிங் செய்து கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி, சிலர் ஸ்டைலுக்காக கலரிங் செய்து கொள்கிறார்கள். கலரிங் செய்வதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வீட்டிலேயே மருதாணியைக் கொண்டு கலரிங் செய்வது, மற்றொன்று அழகு நிலையங்களுக்குச் சென்று கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு கலரிங் செய்வது. இவற்றில் மருதாணி கொண்டு செய்வதால், முடியானது ஆரோக்கியமாகத் தான் இருக்கும். ஆனால் கெமிக்கல் கலந்த கலரிங் செய்யும் போது, அதில் உள்ள அம்மோனியா முடியை அதிகம் வறட்சியடையச் செய்வதுடன், உடையவும் செய்கிறது. ஏனெனில் அம்மோனியா தலையில் உள்ள ஈரப்பதத்தை முற்றிலும் உறிஞ்சி, தலையில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அத்தகைய பிரச்சனைகளைத் தடுக்க வேண்டுமானால், தலைக்கு சரியான பராமரிப்பு கொடுக்க வேண்டும். அதிலும் முட்டையைப் பயன்படுத்தி தலையை பராமரித்து வந்தால், முட்டையில் உள்ள சத்துக்கள் முடியின் வளர்ச்சியைத் தூண்டும். சரி, இப்போது கலரிங் செய்த முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முட்டையைக் கொண்டு எப்படியெல்லாம் ஹேர் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போமா!!!

 

முடி நீண்ட நாட்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமெனில், முட்டையுடன் விளக்கெண்ணெயைப் பயன்படுத்தி மாஸ்க் போட வேண்டும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் 2 முட்டையின் மஞ்சள் கருவுடன், விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, தலையில் தடவி 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். தலைக்கு வினிகரைப் பயன்படுத்தினால், தலையில் உள்ள அழுக்குகள் வெளியேறிவிடும். அதற்க சிறிது வினிகரில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, பின் தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும். எலுமிச்சை சாற்றில் முட்டையை உடைத்து ஊற்றி நன்க அடித்து, அதனைக் கொண்டு தலையை மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்தால், முடியின் நிறம் பாதுகாக்கப்படுவதோடு, வளர்ச்சியும் அதிகரிக்கும். ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை ஊற்றி, அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, பின் அதனை தலையில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும். இதனால் கூந்தலுக்கு புரோட்டீன் அதிகம் கிடைத்து, முடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். மயோனைஸ் தலையில் எண்ணெய் பசையைத் தக்க வைக்கும். எனவே அத்தகைய மயோனைஸை முட்டையுடன் சேர்த்து நன்கு கலந்து, தலையில் தடவி ஊற வைத்து, ஷாம்பு போட்டு அலச வேண்டும். ஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கருவை ஊற்றி, அதில் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் சிறிது வெள்ளரிக்காயை துருவிப் போட்டு, சிறிது வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து, தலையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

Related posts

கூ‌ந்த‌ல் பராம‌ரி‌ப்‌பி‌ல் கவன‌ம்

nathan

கூந்தல் பராமரிப்புக்கு இயற்கை முறை பராமரிப்புக்கள்!….

sangika

முடியை நேராக்கிய பின்பு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள்!…

sangika

முடி வளர சித்த மருத்துவம்

nathan

இதோ உங்களுக்காக..!! இயற்கை முறையில் இளநரையை நிரந்தரமாக நீக்கலாம்..!

nathan

இள வயதில் முடி நரைப்பதற்கான காரணங்கள்

nathan

எங்கேயும் முடி..எதிலும் முடி..!

sangika

சிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தாது

nathan

கூந்தலின் எதிரி ஈரம்

nathan