யாருக்கு தான் அழகான பட்டுப்போன்ற தலைமுடியின் மீது ஆசை இருக்காது. ஆனால் தற்போதைய மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழலால் பல்வேறு தலைமுடி பிரச்சனைகளை சந்திக்கிறோம். குறிப்பாக ஸ்கால்ப்பில் அழுக்குகளின் தேக்கத்தால் தலைமுடி உதிர்வதை சந்தித்து, முடியின் அடர்த்தியை இழக்க நேரிடுகிறது.
இதனால் பலரும் தங்கள் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனையோ நேச்சுரல் ஹேர் மாஸ்க்குகளை முயற்சித்திருப்போம். ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு போடும் ஹேர் மாஸ்க்குகளில் உள்ள சத்துக்கள் தலைச்சருமத்திற்கு கிடைக்கிறதா என்று கேட்டால் பலருக்கும் தெரியாது. இருப்பினும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழியைப் பின்பற்றிப் பாருங்கள்.
நேச்சுரல் ஹேர் மாஸ்க்கிற்கு தேவையான பொருட்கள்: ஆரஞ்சு/எலுமிச்சை – 1 வாழைப்பழம் – 1 பால் -2 லிட்டர் அலுமினியத்தாள்
செய்யும் முறை #1 முதலில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்யும் முறை #2 பின் மிக்ஸியில் வாழைப்பழம் மற்றும் பாலை ஊற்றி, அதோடு எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழச்சாற்றினை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
செய்யும் முறை #3 பிறகு அதை ஸ்கால்ப்பில் படும்படி 2-3 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் அலுமினியத்தாளை தலையில் சுற்றி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
செய்யும் முறை #4 இறுதியில் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.
அலுமினியத் தாள் நன்மை அலுமினியத்தாளை தலையில் சுற்றி ஊற வைப்பதால், ஹேர் மாஸ்க்கில் உள்ள சத்துக்கள் ஸ்கால்ப் மற்றும் தலைமுடியால் உறிஞ்சப்பட்டு, பொடுகுத் தொல்லை மற்றும் தலைமுடி உதிர்வது போன்றவை தடுக்கப்படும்.