குழந்தைகளுக்கு சில்லி பரோட்டா ரொம்ப பிடிக்கும். ஹோட்டலில் கிடைக்கும் சில்லி பரோட்டாவை வீட்டிலேயே எளியமுறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..
குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா
தேவையான பொருட்கள் :
பரோட்டா உதிர்த்தது – 2 (பெரியது)
வெங்காயம் பெரியது – 1
தக்காளி பெரியது – 1
பச்சை மிள்காய் – 1
குடமிளகாய் – பாதி
டொமட்டோ சாஸ் – 2 ஸ்பூன்
அஜினமோட்டோ – ஒரு சிட்டிகை (விரும்பினால்)
சில்லி பவுடர் – கால் டீஸ்பூன்
கரம் மசாலா பவுடர் – கால் டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் – 1-2 டீஸ்பூன்
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு.
ஸ்பிரிங் ஆனியன் அல்லது கொத்தமல்லி தழை அலங்கரிக்க – சிறிது.
செய்முறை :
* வெங்காயம், குடமிளகாய், தக்காளியை நீளவாக்கி வெட்டிகொள்ளவும்
* ஸ்பிரிங் ஆனியன், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பரோட்டாவை உதிர்த்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, டொமட்டோ சாஸ், குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
* தேவைக்கு உப்பு சிறிது அஜினமோட்டோ சேர்த்து நன்கு பிரட்டி சிறிது நேரம் சிம்மில் வைக்கவும். நன்கு மசிந்து விடும்.
* அடுத்து அதில் கரம்மசாலா, சில்லி பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும்.
* அடுத்து பொடியாக உதிர்த்த பரோட்டாவை சேர்த்து நன்றாக கலந்து விடவும். புளிப்பு தேவையென்றால் 1-2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.
* கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி, ஸ்பிரிங் ஆனியன் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
* சுவையான சில்லி பரோட்டா ரெடி.