31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

சூப்பரான மணத்தக்காளி வற்றல் குழம்பு

மணத்தக்காளி வற்றலை வைத்து குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான மணத்தக்காளி வற்றல் குழம்பு
தேவையான பொருட்கள் :

காயவைத்த மணத்தக்காளி வற்றல் – 25 கிராம்,
காய்ந்த மிளகாய் – 2,
புளி – ஒரு எலுமிச்சை அளவு,
சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்,
வெந்தயம், கடுகு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – சிறிதளவு.

செய்முறை :

* புளியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின் மணத்தக்காளி வற்றலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும்.

* அடுத்து இதில் புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

* குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: மழைக்கால இரவில் சூடான சாதத்தில் மணத்தக்காளி வற்றல் குழம்பும், நெய்யும் சேர்த்து சாப்பிட்டால். அருமையான ருசியுடன் இருக்கும். சுட்ட அப்பளம் தொட்டு சாப்பிடலாம். மணத்தக்காளி காய், கீரை இரண்டும் வயிற்றுப்புண்ணை ஆறவைக்கும்.

Related posts

சுவையான வேர்க்கடலை குழம்பு

nathan

புடலங்காய் குழம்பு செய்ய…

nathan

கத்தரிக்காய் பச்சடி

nathan

மழைக் காலத்திற்கேற்ற மிளகுக் குழம்பு

nathan

கும்மூஸ் ( HUMMOOS )

nathan

கோவைக்காய் பொரியல்

nathan

வெஜிடபிள் கறி

nathan

கருணைக்கிழங்கு மசியல்

nathan

குடமிளகாய் சாதம்

nathan