28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201702081302223371 Manathakkali Vathal Kuzhambu SECVPF 1
சைவம்

சூப்பரான மணத்தக்காளி வற்றல் குழம்பு

மணத்தக்காளி வற்றலை வைத்து குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான மணத்தக்காளி வற்றல் குழம்பு
தேவையான பொருட்கள் :

காயவைத்த மணத்தக்காளி வற்றல் – 25 கிராம்,
காய்ந்த மிளகாய் – 2,
புளி – ஒரு எலுமிச்சை அளவு,
சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்,
வெந்தயம், கடுகு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – சிறிதளவு.

செய்முறை :

* புளியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின் மணத்தக்காளி வற்றலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும்.

* அடுத்து இதில் புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

* குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: மழைக்கால இரவில் சூடான சாதத்தில் மணத்தக்காளி வற்றல் குழம்பும், நெய்யும் சேர்த்து சாப்பிட்டால். அருமையான ருசியுடன் இருக்கும். சுட்ட அப்பளம் தொட்டு சாப்பிடலாம். மணத்தக்காளி காய், கீரை இரண்டும் வயிற்றுப்புண்ணை ஆறவைக்கும்.201702081302223371 Manathakkali Vathal Kuzhambu SECVPF

Related posts

கொத்தமல்லி பட்டாணி சாதம் செய்வது எப்படி

nathan

சூடான சாதத்தில் வெண்டைக்காய் கார குழம்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

nathan

வெஜிடேபிள் தம் பிரியாணி

nathan

காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல்

nathan

வாழைக்காய் சட்னி

nathan

புளியோதரை

nathan

செட்டிநாடு காளான் மசாலா

nathan

மஷ்ரூம் மசாலா

nathan

சிம்பிளான… வெஜிடேபிள் தம் பிரியாணி

nathan