தினமும் உணவில் கீரையை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று பொன்னாங்கண்ணிக்கீரையை வைத்து சத்தான சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பொன்னாங்கண்ணிக்கீரை – ஓமம் சப்பாத்தி
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 200 கிராம்,
பொன்னாங்கண்ணிக்கீரை – ஒரு கட்டு
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 2
வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
வெள்ளை எள், ஓமம் – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பொன்னாங்கண்ணிக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் பொன்னாங்கண்ணிக்கீரையை போட்டு பாதியளவு வேகும் வரை வைத்து இறக்கி ஆறவிடவும்.
* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் வெண்ணெய், எள், ஓமம், உப்பு, வேக வைத்த கீரை சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரைமணி நேரம் ஊற விடவும்.
* அடுத்து மாவை மெல்லிய சப்பாத்திகளாக இடவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் அடுப்பை வைத்து, சப்பாத்திகளை சுட்டு எடுக்கவும்.
* சத்தான பொன்னாங்கண்ணிக்கீரை – ஓமம் சப்பாத்தி ரெடி.