30.6 C
Chennai
Sunday, Jul 13, 2025
1474708756 9749
சைவம்

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 2
தேங்காய் – 2 துண்டுகள்
பூண்டு – 10 பல்
கடுகு – 1/4 ஸ்பூன்
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி – 2 ஸ்பூன்
தனியா பொடி – 1
மஞ்சள் பொடி – 1/4 ஸ்பூன்
புளி தண்ணீர் – 1 கப்
நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
கருவேப்பிலை – 1 கீற்று
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கத்தரிக்காய்களை மேலாக காம்பை மட்டும் நறுக்கி விட்டு, மேலே படர்ந்துள்ள காம்பை விட்டு ஒரு கத்தறிக்காயை நான்கு பாகங்காக வரும்படி நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி உரித்த வெங்காயம் மற்றும் நான்கு துண்டுகளால நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கி கொள்ளவும். வதக்கியதை ஆறவிட்டு தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளிக்கவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும். பிறகு கத்தரிக்காயை போட்டு வதக்கி கொள்ளவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும். இதனுடன் மிளகாய், தனியா, மஞ்சள் பொடிகளை சேர்த்து கிளறவும். அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்து காய் வெந்து எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் இறக்கவும். கொத்தமல்லி தூவிவிடவும். சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.1474708756 9749

Related posts

மணத்தக்காளி விதை காரக்குழம்பு

nathan

பேபிகார்ன் கிரிஸ்பி ஃப்ரை

nathan

இதயத்துக்கு இதமான கொத்தவரங்காய் சப்ஜி

nathan

கத்திரிக்காய் புளிக்குழம்பு

nathan

கொப்பரிக்காய வங்காய சிண்டசெட்டு புளுசு

nathan

வெங்காய தாள் கூட்டு

nathan

உருளைக்கிழங்கு ரெய்தா

nathan

வாழைக்காய் சட்னி

nathan

கலவை காய்கறி மசாலா

nathan