24.8 C
Chennai
Monday, Dec 23, 2024
sl4559
சிற்றுண்டி வகைகள்

வெஜ் கட்லெட் லாலிபாப்

என்னென்ன தேவை?

சர்க்கரைவள்ளி கிழங்கு – 50 கிராம்,
உருளைக்கிழங்கு – 50 கிராம்,
கேரட் – 50 கிராம்,
காலி ஃ ப்ளவர் – 50 கிராம்,
பனீர் – 50 கிராம்,
முட்டைகோஸ் – 50 கிராம்,
பச்சைமிளகாய் – 2,
உப்பு – தேவைக்கு,
இஞ்சி, பூண்டு – சிறிதளவு,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலா – 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2,
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி,
சோளமாவு (Corn flour) – 2 டேபிள்ஸ்பூன்,
பிரெட்தூள் – தேவைக்கு,
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கிழங்கு வகைகளை வேகவைத்து மசிக்கவும். மற்ற காய்கறிகளை பொடியாக நறுக்கவும். எண்ணெயை காயவைத்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு இஞ்சி, பூண்டு, கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு, பனீர், காலி ஃப்ளவர், முட்டைகோஸ் போன்றவற்றை ஒவ்வொன்றாக வதக்கி ஆறவைத்து அதில் மசித்து வைத்துள்ள கிழங்கு வகைகள், கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்து பிசைந்து லாலிபாப் சைசில் பிடித்து, அதை பிடித்து சாப்பிட கேரட்டை 2 இன்ச் நீளம் நீளவாக்கில் கட் செய்து லாலிபாப்பில் சொருகவும். கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் லாலிபாப்பை தோய்த்து பிரெட் கிரம்ஸில் கோட்டிங் கொடுத்து வைக்கவும். எண்ணெயை காயவைத்து டீப் ஃப்ரை செய்து எடுக்கவும். வெஜ் கட்லெட் லாலிபாப் ரெடி.sl4559

Related posts

பருப்பு போளி

nathan

கோதுமை ரவை இட்லி&தோசை

nathan

மீல் மேக்கர் பக்கோடா செய்ய…!

nathan

ஒப்புட்டு

nathan

கோயில் வடை

nathan

ஜிலேபி,

nathan

ஆப்பம் வீட்டில் தயாரிக்கும் முறை

nathan

கம்பு உப்புமா

nathan

வெண்டைக்காய் சிப்ஸ்

nathan