29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
ricemaskh 24 1477284011
முகப் பராமரிப்பு

பால் பவுடரைக் கொண்டு உங்கள் முகத்தை ஜொலிக்கை வைக்கும் 6 அழகுக் குறிப்புகள் !!

பால் பவுடர் எளிதில் கிடைக்கக் கூடியது. லாக்டிக் அமிலம் நிறைந்து இருக்கும் இந்த பால் பவுடர் சருமத்திற்கு பல நன்மைகளை தருகிறது.
முகபருக்களை அகற்றும். சருமத்தை சுத்தப்படுத்தும். இறந்த செல்களை நீக்கும். முகத்தை மிருதுவாக்கும்.

பால் பவுடரால் உங்கள் சருமத்தை அழகுபடுத்த இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள். அனைத்தும் உபயோகமானவை.

பால்பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு :
வெயிலினால் உண்டாகும் கருமை, அலர்ஜி ஆங்கியவ்ற்றை போக்கி சருமத்திற்கு நிறம் தரும்.
1 டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். சருமம் பளிச்சிடும்.

பப்பாளி மற்றும் ரோஸ் வாட்டருடன் :
பால் பவுடர் 1 டேபிள் ஸ்பூன் எடுத்து அதில் 7 துளி ரோஸ் வாட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பப்பாளியை கலந்து முகத்தில் பேக் போல் போடுங்கள். 15 நிமிடம் கழித்து குளிந்த நீரில் கழுவுங்கள். இது சிறந்த பலனைத் தரும்.

பால் பவுடர் மற்றும் குங்குமப் பூ :
இந்த குறிப்பு சருமத்தை இளமையாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும். 2 குங்குமப் பூ இதழை எடுத்து எலுமிச்சை நீரில் விட்டு குழைத்துக் கொள்ளுங்கள்.
இதனை 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன் கலந்து சிறிது நீர் விட்டு நன்றாக குழைவாக கரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

பால் பவுடர் மற்றும் முல்தானி மட்டி :
1 டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன் 2 டீ ஸ்பூன் முல்தானி மட்டி சேர்த்து , ரோஸ் வாட்டரில் பேஸ்ட் போல் குழைவாக்கி முகத்தில் பூசுங்கள். தொய்வடைந்த முகம் இறுகி இளமையாக இருக்கும்.

பால் பவுடர் மற்றும் தேன் : 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன் 1 டீ ஸ்பூன் தேன் மற்றும் சிறிது நீர் விட்டு குழைத்து முகத்தில் பூசுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவவும். முகத்தில் இருக்கும் சரும பிரச்சனைகளை போக்கி சருமம் மிளிரும்.

பால் பவுடர் மற்றும் அரிசி மாவு : இந்த குறிப்பு முகப்பருக்களை குணமாக்கும். முகப்பரு தழும்புகளும் மறைந்து போகும். 1 ஸ்பூன் சம அளவில் பால்பவுடர் மற்றும் அரிசி மாவு எடுத்து கலந்து அதனுடன் சிறிது தேன் கலந்து முகம் மற்றும் கழித்தில் தடவவும். 2 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்தபின் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

ricemaskh 24 1477284011

Related posts

சப்போட்டா ஃபேஷியல்

nathan

சருமத்தை தங்கம் போல் ஜொலிக்க கோல்டன் பேஷியல்….?சூப்பர் டிப்ஸ்…

nathan

முகத்தில் இருக்கும் கருமையான படலத்தைப் போக்க சில டிப்ஸ்…

nathan

முகத்தை அழகாக்கும் தக்காளி! சூப்பர் டிப்ஸ்…..

nathan

கழுத்து கருப்பா இருக்கா? பளிச்சென மாற்ற சூப்பர் பேக்குகள்,

nathan

எண்ணெய் வழியும் சருமமா?

nathan

உங்க முகத்தில் எண்ணெய் ரொம்ப வழிந்து கருப்பா காட்டுதா? சூப்பர் டிப்ஸ்

nathan

beauty tips, கோடைக்காலத்தில் உங்கள் அழகை பராமரிப்பது எப்படி?

nathan

புது அம்மாவிற்கான அன்னாசி ஸ்க்ரப் !!

nathan