28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201702061306306758 carrot green dal kootu SECVPF
சைவம்

சத்தான கேரட் – பாசிப்பருப்பு கூட்டு

சத்து நிறைந்த கேரட்டுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று கேரட் – பாசிப்பருப்பு கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான கேரட் – பாசிப்பருப்பு கூட்டு
தேவையான பொருட்கள் :

கேரட் – 1 கப்
பாசிப்பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு.

துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு.

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1

செய்முறை :

* ப.மிளகாய், கேரட், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாசிப்பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்த பின்னர் அதனை குக்கரில் போட்டு, அத்துடன் துவரம் பருப்பு, 1 கப் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு மிக்ஸியில் தேங்காய் மற்றும் சீரகம் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

* பின் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கேரட்டை சேர்த்து, பச்சை வாசனை போக சிறிது நேரம் வதக்கி, பின் அதில் வேக வைத்த பருப்புக்கள் மற்றும் தண்ணீர் ஊற்றி, கேரட் நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்க வேண்டும்.

* கேரட் நன்கு வெந்த பின்னர், அதில் அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், கேரட் – பாசிப்பருப்பு கூட்டு ரெடி!!!201702061306306758 carrot green dal kootu SECVPF

Related posts

சிக்கன் பொடிமாஸ்

nathan

முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல்tamil samayal kurippu

nathan

சத்துக்கள் நிறைந்த கீரை சாதம் செய்வது எப்படி

nathan

கம்பு தயிர்சாதம் செய்வது எப்படி

nathan

காலிஃபிளவர் கேரட் புலாவ்

nathan

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் ஆலு மட்டர் சப்ஜி

nathan

உருளைக்கிழங்கு சாதம்

nathan

சோளம் மசாலா ரைஸ்

nathan

பனீர் பிரியாணி

nathan