25.8 C
Chennai
Monday, Jan 13, 2025
sl4637
சைவம்

பாலக் கிச்சடி

என்னென்ன தேவை?

பாலக்கீரை – 2 கப்,
அரிசி – 2 கப்,
பாசிப்பருப்பு – 1/2 கப்,
பிரிஞ்சி இலை – 2,
கீறிய பச்சைமிளகாய் – 2,
சீரகம் – 1 டீஸ்பூன்,
ஒன்றிரண்டாக பொடித்த மிளகு – 2 டீஸ்பூன்,
நெய் – 4 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய தக்காளி – 1,
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை,
உப்பு – தேவைக்கு, பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

பாலக்கீரையை ஆய்ந்து கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி, சீரகம், மிளகு தூள், பச்சை மிளகாய், பிரிஞ்சி இலை, பெருங்காயத்தூள் போட்டு வதக்கவும். பின்னர் கீரை, தக்காளி சேர்த்து வதக்கவும். அரிசி, பருப்பை களைந்து சேர்க்கவும். மஞ்சள் தூள், 6 கப் தண்ணீர், உப்பு போட்டு கிளறி விட்டு குக்கரை மூடவும். 4 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். வெள்ளரி பச்சடி இதற்கு தொட்டுக் கொள்ள அருமையான காம்பினேஷன்.sl4637

Related posts

சுவையான கத்தரிக்காய் வறுவல் – Brinjal / Eggplant Fry

nathan

கார்ன் குடைமிளகாய் கிரேவி

nathan

முருங்கைக்காய் மிளகு குழம்பு

nathan

சூப்பரான கேழ்வரகு சேமியா வெஜிடபிள் பிரியாணி

nathan

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் உருளைக்கிழங்கு முட்டை பொரியல்

nathan

சுவையான தீயல் குழம்பு

nathan

தேங்காய் பால் காய்கறி குழம்பு

nathan

மிளகு காளான் வறுவல்

nathan

சுவையான கேரட் பொரியல்

nathan