26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
1474112999 0067
சூப் வகைகள்

சுவை மிகுந்த சிக்கன் சூப்

தேவையான பொருட்கள்:

எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் – 1/4 கிலோ
நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 1 கப்
தக்காளி – 2
மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
பூண்டு – 10 பல்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – 1 கீற்று
உப்பு – தேவையான அளவு

வறுத்து பொடி செய்ய:

மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/4 டீஸ்பூன்
தனியா – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2

செய்முறை:

வாணலியில் பொடித்த மிளகு, சீரகம், சோம்பு, தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து எண்ணெய் விடாமல் சிறிது நேரம் வறுத்து பொடி செய்யவும். பூண்டை தட்டி வைக்கவும். குக்கரில் எண்ணெய் சேர்த்து சிக்கனை லேசாக வதக்கவும்.

இத்துடன் கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும். சூப்பிற்க்கு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிக்கனை 2 விசில் வரை வேக வைக்கவும். சிக்கன் வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லித்தழை தூவவும். சிக்கன் சூப் ரெடி.1474112999 0067

Related posts

ஸ்பைசி சிக்கன் சூப்

nathan

கேரட் தக்காளி சூப்

nathan

சூப்பரான கொத்தமல்லி எலுமிச்சை சூப்

nathan

புரோகோலி – வால்நட் சூப்! ஈஸி குக்!

nathan

முட்டைக்கோஸ் சூப்

nathan

மக்காரோனி சூப்

nathan

தாய்லாந்து கோகனட் சூப்

nathan

பாப்கார்ன் சூப்

nathan

இவை இரண்டையும் சூப் செய்து குடித்தால் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் ஏற்படுமாம்…..

sangika