27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
p4 12356
ஃபேஷன்

பிஞ்ச பேண்ட்… பேட்ச் வொர்க்! – கேர்ள்ஸின் ட்ரெண்ட் இதுதான்!

காதல் தேசம் படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு இளைஞன் தன்னை யாரும் கவனிக்கவில்லை என சோகமாக படிக்கட்டில் உட்கார்ந்திருக்க, வடிவேலு அவருடைய பேண்ட், சட்டையை அங்கும் இங்குமாக கிழித்து அவர் தோற்றத்தையே மாற்றிவிட்டு இதான் இப்ப ட்ரெண்ட் என அசால்ட் காட்டுவார். யூத்களின் ட்ரெண்ட் செட் நாம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் காலத்துக்கு ஏற்ப அடிக்கடி மாறுபடும். அந்த வகையில் யுவன் யுவதிகளின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ரிப்டு மற்றும் பேட்ச் வொர்க் ஜீன்ஸ்கள்!. சமீபத்தில் வெளியான ‘டியர் ஜிந்தகி’ படத்தில் அலியாபட் அணிந்திருக்கும் ஜீன்ஸை கவனித்திருக்கிறீர்களா? இப்போது மார்கெட்டில் அந்த மாதிரியான ஜீன்ஸ் பேண்ட்களுக்கு தான் மவுசு அதிகம்.

p4 12356

யாராவது திடீரென இப்படியான மாடர்ன் லுக்கில் நம்மை கடந்து செல்லும் போது, ‘அட, இது என்ன பிஞ்ச பேண்ட் மாதிரி இருக்கே’, ‘ஒட்டு போட்டு தச்ச மாதிரி இருக்கே’ என்றெல்லாம் கலாய்ப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது இதுதான் ஸ்டைல். ஃபேஷன் சந்தைகளை தன்வசம் வைத்திருக்கும் இந்த வகை ஜீன்ஸ்கள் குறித்துப் பேசுகிறார் சென்னை, சுவஸ்ட்ரா டிசைன்ஸ் உரிமையாளர் ஷாலினி.

”கேர்ள்ஸ் மத்தியில் ஸ்லிம் பேண்ட், ஃப்ளோரல் பேண்ட், பிரிண்ட் பேண்ட் இதெல்லாம் இப்போது லேட்டஸ்ட் ஃபேஷனாக இருக்கு. இதையும் தாண்டி அதிகமா ஆசைப்பட்டு வாங்குறது ரிப்டு பேண்டுகளை தான். அதுக்கு அடுத்த இடத்தில் பேட்ச் வொர்க் பேண்ட்கள் இருக்கு. பேண்டுகள்ல என்ன மாதிரியான டிசைன் வேணும்னு முதல்லயே முடிவு செஞ்சுட்டு, அதுக்கு ஏத்த மாதிரி பேண்டில் உள்ள குறுக்கும் நெடுக்குமான நூல்களை பிரிக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப மொத்தமாக கிழிந்த வடிவத்தில் நூலை எடுத்துவிடலாம். பார்ப்பதற்கு கிழிந்த மாதிரிதான் தெரியுமே தவிர, இதன் ஆயுள் அதிகம். சீக்கிரத்தில் மொத்தமாக கிழிந்துவிடாது. டார்க் கலர் பேண்டுகளை விட லைட் கலர் பேண்ட்கள் பார்க்க அழகாக இருக்கும். பேட்ச் வொர்க் பேண்ட்களைப் பொறுத்தவரை ஆங்காங்கே ஒட்டு போட்டது போல துணியை துண்டாக வெட்டி சேர்த்து தைத்திருப்பார்கள். பார்க்க வித்தியாசமான லுக் கொடுக்கும் இந்த பேண்ட்கள் டார்க் மற்றும் லைட் கலர்களில் கிடைக்கிறது” என்னும் ஷாலினி இதன் விலையை சொல்லும் போது கொஞ்சம் ஷாக்கிங் தான்.

குறைந்த விலை, 2000 ரூபாய்: அதிகப்பட்சம், வேலைப்பாடுகளைப்(!) பொறுத்து 10 ஆயிரத்துக்கும் மேல்!

Related posts

நீங்களும் ஹீரோயின்தான்!

nathan

கியூபன் ட்விஸ்ட் ஹேர்: Cuban Twist Hair

nathan

பல விதமான வடிவமைப்பில் உலாவரும் ஹேண்ட்பேக்

nathan

ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு ஆரோக்கிய அறிவுரைகள் இவை…

sangika

mehndi design of front hand

nathan

ரசாயன கலப்பின்றி உருவாகும் ஆர்கானிக் ஆடைகள்

nathan

கலர் கலராய் கவரும் காலணி

nathan

உயரமான பாதணிகள் அணிந்து அழகாய் காட்சி அழிக்கும் பெண்களுக்கு…. இத படிங்க

nathan

எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலைக்கு இதை செய்யாதீர்கள்…

sangika