27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
201702021056547511 corn rava pongal SECVPF
சைவம்

சத்தான சுவையான சோள ரவைப் பொங்கல்

சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சோள ரவையை வைத்து எப்படி சத்தான பொங்கல் செய்வது என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான சோள ரவைப் பொங்கல்
தேவையான பொருட்கள் :

சோள ரவை – ஒரு கப்,
பாசிப் பருப்பு – கால் கப்,
இஞ்சி – சிறிய துண்டு,
மிளகு, சீரகம் – தலா கால் தேக்கரண்டி,
நெய் – ஒரு மேஜைக்கரண்டி,
கறிவேப்பிலை – சிறிது,
ப.மிளகாய் – 2
உப்பு – சுவைக்கேற்ப,
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி,
முந்திரி – 6.

செய்முறை :

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

* பாசிப் பருப்பு, சோள ரவையை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.

* குக்கரில் 3 கப் நீர்விட்டு கொதிக்கவிட வேண்டும்.

* தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் ரவை, பருப்பு, உப்பு சேர்த்து, குழைய வேகவைக்க வேண்டும்.

* கடாயை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் விட்டு சூடானதும் முந்திரி, சீரகம், மிளகு, ப.மிளகாய், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேக வைத்த சோள ரவைப் பொங்கலில் சேர்த்துக் கிளறவும்.

* சூப்பரான சோள ரவைப் பொங்கல் ரெடி.201702021056547511 corn rava pongal SECVPF

Related posts

காலிஃப்ளவர் – பட்டாணி குழம்பு

nathan

முளைக்கீரை தயிர்க்கூட்டு செய்வது எப்படி

nathan

வேப்பம்பூ சாதம்

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு மோர்க்கூழ்

nathan

புதினா குழம்பு

nathan

சுவையான புதினா புலாவ்

nathan

சப்பாத்திக்கு சூப்பரான பன்னீர் குருமா

nathan

சப்பாத்தி லட்டு

nathan

சூப்பரான சுரைக்காய் சப்ஜி

nathan