25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201702031008544204 deficiency libido diabetes SECVPF
மருத்துவ குறிப்பு

சர்க்கரை நோயால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?

நீரிழிவு நோய் ஆண்களை தாக்கும் போது, அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்தையும் பாதிக்கிறது. இதனால் இவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள்.

சர்க்கரை நோயால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?
நீரிழிவு நோய் பெண்களை விட ஆண்களை தான் அதிகமாக பாதிக்கிறது. அதிலும் ஆண்களை தாக்கும் போது, அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்தையும் பாதிக்கிறது.

மேலும் அவர்களின் ரத்த நாளங்கள் பழுதடைவதால், அது விரைவில் சிதைந்து விடுகிறது.

இதனால் ஆண்களுக்கு விரைப்புத் தன்மையற்று, விந்தணுக்களில் குறைபாடு, விந்து முந்துதல், பிரச்சனைகள் ஏற்படுவதால், உடலுறவு குறித்த உணர்ச்சிகள் குறைந்து விடுகிறது.

அதுவே ஒரு பெண்ணிற்கு நீரிழுவு நோயின் தாக்கம் இருந்தால், அவர்களின் பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக் கொள்ளும் யோனிச் சுரப்பிகளில் நீர் குறைந்து பிறப்புறுப்பு வறண்டு, நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

தற்போது நடுத்தர வயதைத் அடைந்த ஆண் மற்றும் பெண்களுக்கு தான் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாக ஏற்படுகிறது. இதனால் அவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள்.

நீரிழிவு நோயானது, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களை தான் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாக்கின்றது. மேலும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாமல் இருந்தால், ஆண்மைக் குறைவு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ஆண்கள் கூடுதலாக புகை, போதை மற்றும் மது போன்ற பழக்கங்களில் ஈடுபடுதல், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல், அதிகமாக மன அழுத்தம், வேலைச்சுமை, அதிகமாக ஓவ்வெடுத்தல் இது போன்ற பல காரணங்களால் ஆண்களை நீரிழிவு நோய் அதிகமாக பாதிக்கிறது.201702031008544204 deficiency libido diabetes SECVPF

Related posts

இடுப்பு வலியால் அவதிப்படுகின்றீர்களா?

nathan

பித்த வெடிப்புகளுக்கு நல்ல பயனை அளிக்கும் இலகுவான வழிகள்!சூப்பர் டிப்ஸ்

nathan

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாமா?

nathan

பரிட்சையில் தோல்வியடையும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை

nathan

தெரிந்துகொள்வோமா? கருப்பை பிரச்சனைகளில் இருந்து விடுபட பெண்கள் இத கண்டிப்பா சாப்பிட்டே ஆகனும்!

nathan

கருப்பை பிரச்சனையை போக்கும் டயட்

nathan

ஆண்மைக் குறைவு பிரச்சனைக்கு தீர்வு தரும் ஆயுர்வேத மருத்துவம்

nathan

இதயம் வேகமாக துடிப்பதால் பிரச்சனை ஏற்படுமா?

nathan

நின்று கொண்டே வேலை செய்வதால் ஏற்படும் வேதனை

nathan