பச்சை பயிறை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். இன்று பச்சைப்பயறு துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான பச்சைப்பயறு துவையல்
தேவையான பொருட்கள் :
பச்சைப்பயறு – அரை கப்,
பூண்டு – ஒரு பல்,
இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 5,
புளி – கோலி அளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை :
* இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
* வெறும் வாணலியை சூடாக்கி, பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
* பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
* அனைத்து நன்றாக ஆறியபின் பயறு, உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் போட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
* சத்தான பச்சைப்பயறு துவையல் ரெடி.
* சூடான சாதத்தில் இந்த துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ளம் செய்து… அதில் பூண்டு ரசத்தை விட்டு சாப்பிட்டால்… ஆஹா, தேவாமிர்தம்!