24.9 C
Chennai
Wednesday, Jan 22, 2025
இலங்கை சமையல்

மங்களூர் மினி கைமுறுக்கு

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு – 1 கப் (அரிசியை களைந்து சுத்தப்படுத்தி ஊறவைத்து நிழலில் உலர்த்தி பின் மாவாக அரைத்தது),
வறுத்து சலித்த உளுத்தம் மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
பொட்டுக்கடலை மாவு – 1 டீஸ்பூன்,
கட்டி பெருங்காயம் – 1 துண்டு,
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் அல்லது எள் – 1 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய், உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அரிசி மாவு, உப்பு, வெண்ணெய், பொட்டுக் கடலை மாவு, உளுத்தம் மாவு, கரைத்த பெருங்காயத் தண்ணீர், சீரகம் அல்லது எள் ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும். எண்ணெயை காய வைக்கவும். பின் சிறிது எண்ணெயை கையில் தடவிக் கொண்டு கலவையில் சிறிது எடுத்து வெள்ளைத் துணியில் வட்டமாக 2 சுற்று சுற்றி மினி முறுக்காக செய்து, மிதமான சூடாக காயும் எண்ணெயில் முறுக்கை உடையாமல் கவனமாக போடவும். வெந்ததும் திருப்பி விட்டு, மீண்டும் நன்றாக வெந்ததும் எண்ணெயை வடித்தெடுத்து ஆறியதும் டப்பாவில் ஸ்டோர் செய்யவும்.

Related posts

முருங்கைக்காய் சாம்பார் / Drumstick sambar tamil

nathan

ஆட்டிறைச்சி – பிரட்டல் கறி – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை:

nathan

இலங்கை ஆப்பம் ஓட்டல் ஸ்டைலில் செய்யனுமா? தொடர்ந்து படியுங்கள்

nathan

சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு முறுக்கு

nathan

ஸ்பெஷல் பிரியாணி!!

nathan

சூப்பரான வெங்காய பக்கோடா செய்வது எப்படி ??

nathan

கர்நாடகா ஸ்பெஷல் முறுக்கு

nathan

கோதுமை மாவு – வாழைப்பழ பணியாரம்

nathan

இலங்கை – ருலங் அலுவா (Rulang Aluwa)

nathan