26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201701301046435503 chettinad poondu kuzhambu chettinad garlic onion kuzhambu SECVPF
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்பு

செட்டிநாடு ஸ்டைலில் அசைவம் தவிர சைவ உணவுகளும் உள்ளன. அதில் ஒன்றான செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்பு
தேவையான பொருட்கள் :

பூண்டு – அரை கப்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 1
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
புளி – 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு…

சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
மல்லி – 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
சின்ன வெங்காயம் – 3
பூண்டு – 5 பற்கள்
வரமிளகாய் – 1
தக்காளி – 1/2

செய்முறை :

* தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தனியாக வைக்கவும்.

* புளியை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.

* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்த பின் அதில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் புளிச்சாற்றினை சேர்த்து கொதிக்க விடவும்.

* குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.

* அடுத்து அதில் அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து கிளறி 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்பு ரெடி!!!201701301046435503 chettinad poondu kuzhambu chettinad garlic onion kuzhambu SECVPF

Related posts

தேங்காய் சேர்க்காத செட்டிநாடு மீன் குழம்பு

nathan

சுவையான செட்டிநாடு கோழி உப்பு வறுவல்

nathan

செட்டிநாடு காலிஃப்ளவர் சூப்

nathan

சூப்பரான செட்டிநாடு கோவக்காய் மசாலா

nathan

செட்டிநாட்டு சமையல் கவுனி அரிசி இனிப்பு

nathan

செட்டிநாடு மீன் பிரியாணி,tamil samayal tips

nathan

செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி

nathan

செட்டிநாடு காளான் கிரேவி

nathan

சுவையான காரமான கத்திரிக்காய் வறுவல்

nathan