25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அசைவ வகைகள்அறுசுவை

நண்டு மசாலா

தேவையானவை :
download (3)நண்டு – ஐந்து
நல்லெண்ணெய் – 25 மில்லி
சோம்பு – 10 கிராம்
மிளகாய் வற்றல் – ஒன்று
கறிவேப்பிலை – பத்து
பெரிய வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 10 கிராம்
தக்காளி – 50 கிராம்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
சோம்பு, சீரகப் பவுடர் – கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
தேங்காய் – அரைமூடியில் பாதியளவு
கொத்தமல்லி தழை – அலங்கரிக்க
உப்பு – தேவையான அளவு

 

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவேண்டும். தக்காளியை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும். தேங்காயை தனியாக அரைத்து வைக்கவேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் பொன்னிறமாக வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். மசாலா பொடிகள், தக்காளி விழுது, நண்டு, உப்பு சேர்த்து ஒருநிமிடம் வதக்க வேண்டும். இதில் அரைலிட்டர் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடங்கள் வேகவிட வேண்டும். கொதித்து வரும் போது தேங்காய் விழுது சேர்த்து, சற்றே கெட்டியாகும் வரை வேகவிட வேண்டும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் நல்லெண்ணெய் விட்டு கிளறி கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்க வேண்டும். சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்தி, நாண், ரொட்டியோடு சாப்பிட விரும்பினால், முந்திரிபருப்பு விழுது சேர்க்க வேண்டும்.சமையல் நேரம் : 20 நிமிடங்கள்.

Related posts

ஹெர்ப் சிக்கன் ஃப்ரை

nathan

ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா

nathan

காளான் dry fry

nathan

ரமலான் ஸ்பெஷல் உணவுகள்

nathan

அரேபியன் மட்டன் மந்தி பிரியாணி

nathan

பட்டாணி பொரியல்

nathan

இறால் மசால்

nathan

“நாசிக்கோரி”

nathan

மாட்டிறைச்சி பிரியாணி செய்முறை ,மாட்டிறைச்சி பிரியாணி எப்படி சமைக்க வேண்டும்,tamil samayal biryani,tamil easy samayal

nathan