29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
tartar 13 1476340247
மருத்துவ குறிப்பு

பற்களின் பின் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறைகளைப் போக்கும் எளிய வழிகள்!

பலரும் பற்களின் முன் இருக்கும் மஞ்சள் கறைப் போக்க மட்டும் தான் முயற்சித்திருப்பார்கள். ஆனால் பற்களின் பின்னாலும் கறைகள் இருக்கும் என்பது தெரியுமா? இந்த கறைகளை அப்படியே விட்டுவிட்டால், அது அப்படியே பச்சையாக மாறி, பின் அதுவே வாயின் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்.

பற்களின் பின் இருக்கும் மஞ்சள் கறைகளைப் போக்குவதற்கு தினமும் பற்களை தேய்க்கும் போது, பின்புறமும் தேய்ப்பதோடு, ஒருசில ட்ரிக்ஸ்களை முயற்சித்தால், பற்களின் பின் இருக்கும் மஞ்சள் கறைகளை எளிதில் போக்கலாம். இங்கு அந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

எள்ளு சிறிது எள் விதைகளை வாயில் போட்டு விழுங்காமல் நன்கு மெல்ல வேண்டும். பின் வெறும் டூத் பிரஷ் கொண்டு பற்களைத் தேய்க்க வேண்டும். இதனால் எள் ஒரு ஸ்கரப்பர் போன்று செயல்பட்டு, பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளை அகற்றும்.

கல் உப்பு பற்களைத் துலக்கும் போது, சிறிது கல் உப்பை டூத் பிரஷ்ஷில் வைத்து, பற்களைத் துலக்க வேண்டும். பின் குளிர்ச்சியான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1 சிட்டிகை உப்பு சேர்த்து, டூத் பிரஷை நீரில் நனைத்துப் பின் பேக்கிங் சோடா கலவையைத் தொட்டு பற்களைத் துலக்க வேண்டும். பிறகு நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் அகலும்.

ஆரஞ்சு தோல் ஆரஞ்சு தோலை நேரடியாக பற்களில் தேய்ப்பதன் மூலமும் பற்களில் உள்ள காறைகள் நீங்கும். இல்லாவிட்டால் ஆரஞ்சு தோலை அரைத்து, அதனை பற்களில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ, பற்கள் வெண்மையாகி இருப்பதைக் காணலாம்.

காய்கறிகள் மற்றும் பழங்கள் பற்களில் கறைகள் படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் ஆப்பிள், கேரட், பேரிக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால், பற்களின் ஆரோக்கியத்தையும், அழகையும் அதிகரிக்கலாம்.

அத்திப்பழம் அத்திப்பழம் உங்கள் கண்களில் பட்டால், அதைத் தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். அத்திப்பழம் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, பற்களில் இருக்கும் அசிங்கமான கறைகளைப் போக்கும். அதிலும் அத்திப்பழத்தை 3-4 சாப்பிட்டால், அது வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டும். இதனால் வாயில் எச்சில் அதிகம் சுரக்கப்பட்டு, பாக்டீரியாக்களால் பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.tartar 13 1476340247

Related posts

மார்பகத்தின் அளவிற்கும் தாய்பால் சுரப்பிற்கும் தொடர்பு உண்டா?

nathan

சூப்பர் டிப்ஸ்! நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான மிக முக்கிய மருத்துவக்குறிப்புகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இனிமேல் உங்கள் குழந்தையை பிறப்பதற்கு முன்னரே நீங்கள் பார்க்க முடியும்

nathan

கருமுட்டை உருவாக்கம்

nathan

மனஅழுத்தம் உடையோர் வெளிப்படுத்தும் நடவடிக்கைகள்

nathan

தவறான உறவால் வாழ்க்கையை இழக்கும் பெண்கள்

nathan

இந்த இடங்களில் வலி ஏற்பட்டால், உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்…

nathan

ஒற்றைத்தலைவலியைப் போக்க உதவும் 10 இயற்கை வழிமுறைகள்!

nathan

மழைக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய 30 விஷயங்கள் :-

nathan