26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
the funny love 18368
மருத்துவ குறிப்பு

லவ்வர் கூட சண்டையா? இந்த 7 விதிகள் உங்களைக் காப்பாத்தும்!

லவ்வர்கூட அடிக்கடி சண்டை வருதா பாஸ்? லவ் பண்றதே தியாகம்தான்னு தத்துவம் சொல்லி லவ்வர்கூட சண்ட போட்றத விட்டுட்டு இந்தத் தியாகத்தைப் பண்ணிப் பாருங்களேன்!

லவ்வர்கூட

* இரண்டு பேரில் ஒருவர் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சோசியல் மீடியாவில் இல்லாமல் இருந்தால் மிகச் சிறப்பு. அதுதான் சண்டை ஏற்பட முதல் காரணமாக இருக்கும். பேசாத மற்ற நேரம் போக ஒவ்வொரு செகண்டும் அவர் ஆன்லைனில் இருக்காங்களானு பார்ப்பதே குல வேலையாக வைத்திருப்போம். அப்படிப் பார்க்கும் நேரத்தில் ஒரே ஒரு ஹாய் மெசேஜ் அனுப்பினாலே போதும். அப்படி என்னதான் கெளரவ குறைச்சலோ இவர்களுக்கு. பொறுமை தாங்காமல் அனுப்பிய மெசேஜ் சண்டையில்தான் போய் முடியும்.

* போனில் பேசாமல் நேரில் சென்று நேரம் ஒதுக்கிப் பேசினால்தான் இருவருக்கும் நல்லது. போனில் முடிவுக்கு வராத பல வாக்குவாதங்கள் நேரில் சென்று பார்த்துப் பேசும்போது சுமூகமான முறையில் முடிவுக்கு வரும். இப்படியே ஈகோ பார்த்து ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தால் சண்டை போடுவதற்கு சாக்குப்போக்குதான் கூடும். அப்படி ஒருவருக்கொருவர் அருகில் இருக்கும்போது மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் அவருடன் நேரம் செலுத்த வேண்டும். முடிந்தவரை செல்போனை வீட்டிலே வைத்துவிட்டு வரலாம்.

* முக்கியமாக இருவருக்கும் புரிதல் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் நம்முடன் பேசாமல் இவனோ/ இவளோ என்ன செய்கிறாள் என்ற எண்ணம் இருவருக்கும் இடையில் தோன்றவே கூடாது. நாஞ்சில் சம்பத் போலக் காத்திருந்தாலே போதும். பிரச்னைகளே வராது. முடிந்தவரை செல்போனை எதற்குக் கண்டுபிடித்தார்களோ அதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இருவருக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்படும் நேரத்தில் இதை உணர்த்தினால்தான் நம்ம லவ் இவனுக்கோ/ இவளுக்கோ புரியும் என்று நினைத்துச் செய்யும் காரியங்களை அவாய்ட் செய்ய வேண்டும். பல தப்பான முடிவுக்கு அதுவே வழிவகுக்கும்.

* இருவருக்கும் நண்பர்கள் இருப்பார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும். அது பையனோ/ பெண்ணோ அதைக் கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு நம்மைத் தாண்டி சில பெர்சனல் விஷயங்கள் இருக்கின்றன. அதை நம்மிடம் சொல்லவில்லையே என்ற எதிர்பார்ப்புகளே வேண்டாம். நம் காதலியை/ காதலனை நாம்தான் நம்ப வேண்டும். அதையும் மீறி சில விஷயங்கள் உறுத்தினால் சிறிதுநேரம் எந்தத் தொந்தரவுகளும் இல்லாமல் தனியாக இருந்துவிட்டுப் பிறகு அவரிடம் பேசினாலே போதும். முடிந்தவரை பிரச்னைகள் ஏற்படும்போது தனியாக இருந்தால் நல்லது.

* முக்கியமாக விளையாட்டு வினையாகிவிடக் கூடாது. முக்கால்வாசி சண்டைக்குக் காரணம் என்று பார்த்தால் சின்ன விஷயம்தான். பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் தனித்துவங்கள் என்று சில இருக்கின்றன. அதை இருவருமே புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

* எந்த ஒரு விஷயத்தையும் ஒருவருக்குள் ஒருவர் திணிக்கவே கூடாது. அதை நாமேதான் சரி செய்ய வேண்டும். அதேபோல் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்போதே கேட்டு முடித்துவிட வேண்டும். அதைக் காரணம் காட்டி இன்னொரு வழியில் பலி வாங்கக் கூடாது. எதிர்பார்ப்புகளை ஒருவருக்கொருவர் டீச்சர் சொல்லிக் கொடுத்தது போல் ஷேரிங் செய்துகொண்டாலே போதும். ப்ராப்ளம் சால்வ்டு.

the funny love 18368

* இது எல்லாத்தையும்விட முக்கியம் கேட்கிற கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்வதை தவிர்க்க வேண்டும். ஹ்ம்ம்ம், ஓகே, ஒண்ணும் இல்லை, அப்புறம் போன்ற வார்த்தைகளை அறவே பயன்படுத்தக் கூடாது. அதிகமாக இந்தத் தொணியில் பேசுவது பொண்ணுங்க மட்டும்தான். இப்படிப் பேசினால் பசங்க கடுப்பாதான் ஆவாங்க. அதனால் இப்படிப் பேசுவதைப் பொண்ணுங்க தவிர்ப்பது நல்லது.

Related posts

உங்களுக்கு தெரியுமா கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் தரும் சோம்பு…!

nathan

உங்களுக்கு தெரியுமா தொப்பை வருவதற்கு இவை தான் காரணம்

nathan

இவை தொடர்ந்து சாப்பிட்டு வர கெட்ட கொழுப்பினை கரைக்கும் வேலையை செய்திடும்!…

sangika

வாயு தொல்லையை போக்கும் பெருங்காயம்

nathan

உங்கள் ஆரோக்கியத்தை அழிக்கும் தினசரி பழக்கங்கள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…புஷ்-அப் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

கர்ப்பகால அடிப்படை பரிசோதனைகள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா மாதவிடாய் தாமதமாக காரணம் என்ன?

nathan

தைராய்டு ஆபத்தை அதிகரிக்கும் உங்களின் ஐந்து உடல்நல கோளாறுகள்!

nathan