25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sl4518 1
சூப் வகைகள்

கிரீன் கார்டன் சூப்

என்னென்ன தேவை?

பார்ஸ்லி இலை – 1/4 கப்,
பாலக் கீரை – 1/2 கப்,
கொத்தமல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன்,
புதினா – 5 இலைகள்,
கறிவேப்பிலை – 5 இலைகள்,
ஓரிகானோ – 1/2 டீஸ்பூன்,
பேசில் இலை – 1/2 டீஸ்பூன்,
வெள்ளை மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,
கருப்பு மிளகுத் தூள் – 1/2 + 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்,
மரவள்ளிக்கிழங்கு – 100 கிராம்,
ஆலிவ் ஆயில் – 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயத்தாள் – 3 தண்டு,
பூண்டு – 3 பல்,
ஃப்ரெஷ் வெஜிடபிள் ஸ்டாக் – 1 கப்,
தண்ணீர் – 800 மிலி,
உப்பு – தேவைக்கு,
சூப் கியூப்ஸ் – 1/4 கப்.


எப்படிச் செய்வது?

பச்சை கீரைவகைகள் அனைத்தும் (பார்ஸ்லி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பேசில் இலை) நன்கு கழுவி வைக்கவும். மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி துருவி வைக்கவும். குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, அதில் கீரைவகைகள், ஓரிகானோ, பேசில் இலை, வெள்ளை மிளகுத் தூள், கருப்பு மிளகுத் தூள், உப்பு, சர்க்கரை, சூப் கியூப்ஸ், துருவிய மரவள்ளிக்கிழங்கு சேர்த்து 3, 4 விசில் விட்டு வேகவைக்கவும்.

வெந்த சூப்பை குளிர வைத்து ப்ளென்டரில் முக்கால் பதமாக அடிக்கவும். ஒரு கடாயில் ஆலிவ் ஆயிலில் வெங்காயத்தாள் மற்றும் பூண்டை பொடியாக அரிந்து போட்டு தாளித்து, ப்ளென்ட் செய்த சூப்பில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். சூடாக வெஜ் கட்லெட், பஜ்ஜி போண்டா வகைகளுடன் பரிமாறலாம்.

குறிப்பு :

மரவள்ளிக்கிழங்குக்கு பதில் சர்க்கரைவள்ளி, உருளைக்கிழங்கும் சேர்த்து செய்யலாம். sl4518

Related posts

சத்தான கேரட் இஞ்சி சூப் செய்முறை விளக்கம்

nathan

முட்டைக்கோஸ் – கேரட் சூப் செய்வது எப்படி

nathan

பேபிகார்ன் மஷ்ரூம் செலரி சூப்

nathan

சத்தான சுவையான வெண்டைக்காய் சூப்

nathan

இவை இரண்டையும் சூப் செய்து குடித்தால் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் ஏற்படுமாம்…..

sangika

முருங்கை கீரை சூப்

nathan

சத்து நிறைந்த ராகி நூடுல்ஸ் வெஜிடபிள் சூப்

nathan

சுவை மிகுந்த சிக்கன் சூப்

nathan

பார்லி லெண்டில்ஸ் சூப்

nathan