25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
WtPAT3O
மருத்துவ குறிப்பு

தும்மல் பிரச்னையை போக்கும் மருத்துவம்

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் சமையலறையில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத, எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தும்மலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு பாகற் இலை, எலுமிச்சை இலை, வேப்பிலை, மஞ்சள், சாமந்தி பூ, இஞ்சி போன்றவை மருந்தாகிறது.பாகற் இலையை பயன்படுத்தி தும்மலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு கைப்பிடி அளவுக்கு பாகற் இலைகளை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தவும். பின்னர், பாகற் இலையில் நீர் ஊற்றி சுமார் 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், இலைகளை வடிகட்டி தண்ணீரை தினமும் ஒருவேளை குடித்துவர தும்மல் கட்டுப்படும்.
பல்வேறு நன்மைகளை கொண்டது பாகற் கொடி. இதன் காய், இலைகளில் அற்புத மருத்துவ குணங்கள் உள்ளன. இது, நோய் எதிர்ப்பு சக்தி உடையது. ஒவ்வாமை, தொற்று ஆகியவற்றால் வரும் தும்மலுக்கு மருந்தாகிறது. தலையில் நீரேற்றம், நெஞ்சக சளி போன்ற காரணங்களால் தும்மல் பிரச்னை ஏற்படுகிறது. தும்மலுக்கு சாமந்தி பூ மருந்தாகிறது. சாமந்தி பூவுடன், இஞ்சி சேர்த்து தேனீராக்கி குடிப்பதால், தும்மல் பிரச்னை சரியாகும்.

எலுமிச்சை இலையை பயன்படுத்தி தும்மலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: எலுமிச்சை இலை, வேப்பிலை, மஞ்சள். செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது வேப்பிலை எடுக்கவும். இதனுடன் எலுமிச்சை இலை, சிறிது மஞ்சள் சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து வரும் நிலையில், ஆவி பிடிப்பதால் தலைநீரேற்றம் குறைந்து தும்மல் கட்டுப்படும். இது, நெஞ்சக சளியை கரைத்து தும்மல், இருமலை போக்குவதாக அமைகிறது. விரலி மஞ்சளை பயன்படுத்தி தும்மலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தும்மல் பிரச்னை இருக்கும்போது, விரலி மஞ்சளை விளக்கின் நெருப்பில் காட்டும்போது வரும் புகையை நுகர்வதால் தும்மல் விலகும். இது, தலையில் நீரேற்றத்தை போக்கும் மருந்தாக விளங்குகிறது. அலர்ஜி, வைரஸ் தொற்றால் ஏற்படும் தும்மலை போக்குகிறது.

எப்போது தும்மல் விலகிப்போகிறதோ அப்போது பல்வேறு நோய்களும் விலகி செல்கின்றன. எனவே, இதுபோன்ற எளிய மருத்துவத்தை கொண்டு தும்மல் பிரச்னையில் இருந்து விடுபடலாம். வயதானவர்களுக்கு சிறுநீரை அடக்குவதில் ஏற்படும் சிரமத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இது, வயது முதிர்வில் ஏற்படும் பிரச்னை. குறிப்பாக, பெண்களை பாதிக்கின்ற ஒன்று. இதற்கு கழற்சிக்காய் மருந்தாக விளங்குகிறது. தேவையான பொருட்கள்: கழற்சிக்காய், மிளகு, பெருங்காயம்.

செய்முறை: ஒரு கழற்சிக்காயில் உள்ள பருப்பை பொடி செய்து எடுக்கவும். இதில், 5 மிளகு பொடித்து போடவும். இதனுடன் சிறிது பெருங்காயம் சேர்த்து அன்றாடம் இருவேளை சாப்பிட்டுவர சிறுநீரை அடக்க முடியாத பிரச்னை சரியாகும்.WtPAT3O

Related posts

தீக்காயத்துக்குத் தீர்வு என்ன?

nathan

சமையல் அறையில் இருக்கு முதலுதவி! ~ பெட்டகம்

nathan

இந்த காரணத்துனால கூட நீங்க கர்ப்பம் ஆகமா இருக்கலாமாம்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இளம் பருவத்தினரைப் பாதிக்கும் மன அழுத்தம்

nathan

அல்சரால் கஷ்டப்படுறீங்களா? இதோ அற்புதமான சில வீட்டு வைத்தியங்கள்!!!

nathan

உட்கார்ந்தே இருந்தால் ஏற்படும் உபாதைகள்

nathan

gas trouble home remedies in tamil – வயிற்று வாயு பிரச்சினைக்கு

nathan

இதயத்தை பாதுகாக்க சிறந்த உணவு முறை எது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!

nathan