24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
rice cutlet 09 1470745745
சிற்றுண்டி வகைகள்

சுவையான… அரிசி சாத கட்லெட்

மாலையில் சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதேனும் சாப்பிட நினைத்தால், மதியம் சமைத்த சாதத்தைக் கொண்டு கட்லெட் செய்து சாப்பிடுங்கள். அதிலும் அத்துடன் சில காய்கறிகளை சேர்த்து செய்தால், இன்னும் பிரமாதமாக இருக்கும். இந்த கட்லெட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த அரிசி சாத கட்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: அரிசி சாதம் – 1 கப் வேக வைத்த உருளைக்கிழங்கு – 1 (வேக வைத்து மசித்தது) மிக்ஸ்டு வெஜிடேபிள் (பீன்ஸ், கேரட், குடைமிளகாய்) – 1 கப் (பொடியாக நறுக்கியது) வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1 சிட்டிகை சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன் சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தட்டில் பிசைந்து வைத்துள்ளதை கட்லெட் வடிவில் தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், அரிசி சாத கட்லெட் ரெடி!!!

rice cutlet 09 1470745745

Related posts

ஃபலாஃபெல்

nathan

சிக்கன் மோஜோ பர்கர்

nathan

அரைத்தமாவு தட்டை

nathan

சுவையைக் கொண்ட மஸ்ரூம் பாப்பர்ஸ்..

nathan

முட்டை சென்னா

nathan

ரவா நிம்மபண்டு புளிஹோரா

nathan

கறிவேப்பிலை இட்லி

nathan

சுவையான சத்தான நெல்லிக்காய் துவையல்

nathan

வாழை இலை கொழுக்கட்டை

nathan