Description:
உடல் பருமனாக இருப்பது அழகு பிரச்னை மட்டுமல்ல, மருத்துவ பிரச்னையும் கூட. நம் நாட்டில் 30 முதல் 50 சதவீத பேருக்கு உடல் பருமனால் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, கொழுப்பு சத்து, மாரடைப்பு, பக்கவாதம், இடுப்புவலி, முழங்கால் வலி, பாதங்கால் வலி, மாதவிடாய் கோளாறு, குழந்தையின்மை, நெஞ்சுக்கரிப்பு, கல்லீரல் கொழுப்பு ஆகியவை ஏற்பட்டு பாதிக்கப்படுகிறார்கள்.
உடல் பருமனுக்கு ஆளானவர்கள் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி, மருத்துவத்துக்கு செலவழிக்கிறார்கள். இப்படி செலவழிப்பதற்கு பதிலாக உடல் எடையை குறைத்தாலே பெரும்பாலான உடல் நோய் பாதிப்புகள் நீங்கும். சிகிச்சைக்கான செலவுகள் மிச்சமாகும். உடல் எடையை குறைத்தால் ஆரோக்கியம் பெற்று ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம். உடல் பருமானால் சிறுவர், சிறுமிகளுக்கு ஞாபகத்திறன் குறைபாடு ஏற்படுகிறது. உடல் எடையை குறைத்தால் ஞாபக திறன் குறைபாடு நீங்கும்.
உடல் எடை குறைக்க 3 வழிகள் :
உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்து ஆகியவற்றின் மூலம் உடல் எடையை குறைக்கலாம். உணவு கட்டுப்பாடு என்றால் பட்டினி கிடப்பதல்ல. காலை, மதியம், இரவு நாம் எப்பொழுதும் சாப்பிடும் சரிவிகித உணவு, இடையில் 2 வேளை பட்டாணி, சுண்டல் போன்ற சிற்றுண்டி உண்ணலாம். தினசரி முட்டை சேர்க்கலாம், வாரம் 3 முறை மீன் சாப்பிடலாம். இதர இறைச்சி வகைகள் உண்ணக்கூடாது. இது தான் உணவு கட்டுப்பாடு.
உடற்பயிற்சி தினசரி அரை மணி நேரமாவது மேற்கொள்ள வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம் நடக்க வேண்டும். தினசரி 10 ஆயிரம் அடிகள் (ஆறரை கி.மீ.) நடந்தால் நல்லது. மைதானத்திற்கு செல்ல வேண்டுமென்பதில்லை. குடும்பத்தோடு விளையாடலாம். அதுவும் உடற்பயிற்சி தான்.
எளிய மருந்து :
உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சிக்கு அடுத்தபடியாக மருந்து எடுக்கலாம். தினசரி ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். இதன் மூலம் உடல் எடை மேலும் குறையும். இத்தகவலை கோவையிலுள்ள ஒரு பிரபல உடல் பருமன் மருத்துவ சிகிச்சை நிபுணர் கூறினார்.
Title: உடல் எடை குறைத்தால் நோய் வருவதை தவிர்க்கலாம்!
Views: 3 views