25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201701231149203560 Oil Massage the hair SECVPF
தலைமுடி சிகிச்சை

ஆயில் மசாஜ் செய்தால் கூந்தல் வளருமா?

அடிக்கடி கூந்தலுக்கு ஆயில் மசாஜ் செய்தால் தான் நன்கு வளரும் என்ற நம்பிக்கை இளம் தலைமுறையினர் இடையே உள்ளது. இது உண்மையா என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஆயில் மசாஜ் செய்தால் கூந்தல் வளருமா?
கூந்தல் வளர்ச்சிக்கும் எண்ணெய்க்கும் எந்த வகையிலும் சம்பந்தமில்லை. எண்ணெய் தடவுவதாலோ, விதம் விதமான எண்ணெய் தடவுவதாலோ கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும் எனப் பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எண்ணெய் எந்த விதத்திலும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவுவதில்லை. எந்த

எண்ணெயும் கூந்தலை வளரச் செய்யாது. எண்ணெய் தடவுவதன் மூலம் மண்டைப் பகுதியில் ஒருவித வழுவழுப்புத் தன்மை ஏற்படும். சிறிது நேரத்துக்கு கூந்தலை மென்மையாக வைக்கும் அவ்வளவுதான். ஆயில் மசாஜ் செய்யும் போது நீங்கள் ரிலாக்ஸ்டாக உணர்வீர்கள். அந்த எண்ணெய் உங்கள் மண்டைப் பகுதிக்குள் இறங்கி வேலை செய்வதாக நினைப்பீர்கள். உண்மையில் எண்ணெய் என்பது மண்டைக்குள் இறங்காது. அது ஒருவித வெளிப்பூச்சு. அவ்வளவே!

ஆயில் மசாஜ் செய்ததும் கட்டாயம் தலைக்குக் குளிக்க வேண்டும். அதனால் மசாஜ் செய்த எண்ணெய் தவிர, மண்டைப் பகுதியில் இயற்கையாக உள்ள எண்ணெய் பசையும் சேர்ந்து போவதால், கூந்தல் இன்னும் அதிகம் வறண்டுதான் போகும். கூந்தல் வளர்ச்சி என்பது எண்ணெய், ஷாம்பு போன்ற வெளிப்புற சிகிச்சைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது உள்ளே போகிற ஊட்டத்தைப் பொறுத்தது.201701231149203560 Oil Massage the hair SECVPF

Related posts

அதிக முடி உதிர்தலுக்கு இந்த வெந்தயத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

nathan

பொடுகை போக்கி, இளநரையை தடுக்கும் வெந்தயம்

nathan

சூப்பர் டிப்ஸ்.. பெண்களுக்கு முகத்தில் முடிகள் வருவதற்கான காரணமும் – தீர்க்கும் இயற்கை வழிமுறையும்

nathan

அழகான கூந்தலுக்கு…

nathan

தினமும் 100 முடி உதிர்ந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

nathan

ஆண்களே! என்ன பண்ணாலும் உங்க தலையில இருக்க பொடுகு போகமாட்டீங்குதா?

nathan

உங்கள் கூந்தல் வளர்ச்சியை எப்படி மெருகேத்தலாம்? தெரிந்துகொள்வோமா?

nathan

இயற்கையான முறையில் பொடுகு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!…

nathan

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ‘ஷாம்பு’ பயன்படுத்தலாம்

nathan