25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201701221231025529 Things to look out for Group Workout SECVPF
உடல் பயிற்சி

குரூப் வொர்க் அவுட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

பல இடங்களில் 30 – 40 பேர் கூட்டம் கூட்டமாக ஜூம்போ டான்ஸ்/ ஏரோபிக்ஸ் பயிற்சி செய்யும்போது ஒரு சிலருக்கு முழு பலன்கள் கிடைப்பதில்லை. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.

குரூப் வொர்க் அவுட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை
ஜூம்போ டான்ஸ் போன்றவை இப்போது ஜிம்களிலேயே கற்றுத் தரப்படுகின்றன. ஒரு மணி நேரம் ஜூம்போ டான்ஸ் செய்வதால் ஐநூறு முதல் இரண்டாயிரம் கலோரிகள் வரை கூட எரிக்க முடியும். ஆனால் பல இடங்களில் 30 – 40 பேர் கூட்டம் கூட்டமாக டான்ஸ் செய்யும்போது ஒரு சிலருக்கு முழு பலன்கள் கிடைப்பதில்லை.

ஜூம்போ டான்ஸ்/ ஏரோபிக்ஸ் தெரியாதவர்கள் எப்போதும் டிரைனருக்கு முன் வரிசையில், அவர் சொல்லித் தருகிறபடி படிப்படியாக ஒவ்வொரு நிலையாக ஏரோபிக்ஸ் பயிற்சிகளை செய்ய வேண்டும். ஏதோ ஒரு வரிசையில், டிரைனரின் பார்வையில் படாதவாறு நின்று பயிற்சி செய்தால், ஒழுங்காக ஸ்டெப்ஸ்களை கற்றுக்கொள்ள முடியாது. அதோடு நேர விரயம், பண விரயம்தான் ஏற்படும். ஏரோபிக்ஸ் பயிற்சிக்கு நன்றாக பழக்கப்பட்டவர்கள் பின் வரிசைகளில் குழுவோடு சேர்ந்து பயிற்சி செய்வதில் தவறில்லை.

ஏரோபிக்ஸ் பயிற்சிகளைப் பொறுத்தவரை பாதுகாப்பான, நல்ல தரமான ஷூக்கள் அணிந்து பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல, பயிற்சி பெறும் இடத்தில் நல்ல தரை இருக்கிறதா என பார்க்க வேண்டும். ஜூம்போ/ஏரோபிக்ஸ் போன்றவை செய்வதற்கென பிரத்யேக மேட் போடப்பட்டிருக்கும் இடத்தில் மட்டுமே பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இல்லையெனில் கால், மூட்டு மற்றும் முதுகுத் தண்டு போன்ற பகுதிகள் பாதிக்கப்படும்.

உடல்பருமனாக இருப்பவர்கள், டான்ஸ் மற்றும் ஜம்பிங் பயிற்சிகள் போன்றவற்றை பயிற்சியாளர் அறிவுரை இல்லாமல் செய்யக் கூடாது. ஏனெனில் மூட்டு வலி, கணுக்கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்றவையோ அல்லது அவ்விடங்களில் காயங்களோ ஏற்பட வாய்ப்புண்டு. முதுகுத் தண்டு பிரச்சனை இருப்பவர்கள், மூட்டு வலி இருப்பவர்கள், அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் இப்பயிற்சிகளைத் தவிர்க்கவும்.201701221231025529 Things to look out for Group Workout SECVPF

Related posts

சுகர் வராமல் தடுக்க உதவும் யோகாசனம்!

nathan

நுரையீரலில் இருந்து முழுமையாக கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தமாக இந்த யோகாவை செய்யுங்கள்….

sangika

நரம்புகளை வலுவக்கும் நௌகாசனம்

nathan

தொடைப்பகுதி கொழுப்பை கரைக்கும் பயிற்சி

nathan

30 நிமிட நடைப்பயிற்சி உங்கள் உடலில் உண்டாக்கும் அதிசயங்கள்

nathan

ஒவ்வொரு ஆசனத்தையும் எத்தனை முறை செய்ய வேண்டும்

nathan

இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

nathan

முதன்முறையாக 10 பேக் வைத்து அசர வைத்த நடிகர் ஷாருக்கானின் டயட் ரகசியங்கள்!!!

nathan

பெண்களின் நோய் தீர்க்கும் அர்த்த சர்வாங்காசனம்

nathan