25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
drinking juice 21 1484981427
தொப்பை குறைய

தொப்பையை வேகமாக கரைக்க வேண்டுமா? அப்ப தினமும் இத ஒரு டம்ளர் குடிங்க…

உங்களுக்கு அடிவயிற்றுப் பகுதியில் மட்டும் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளதா? இதனால் உங்கள் உடலமைப்பே மாறிவிட்டதா? எந்த ஒரு உடையை அணிந்தாலும் அசிங்கமாக தொப்பை தொங்கி காணப்படுகிறதா? இதற்காக எத்தனையோ வழிகளை முயற்சித்தும் தொப்பை குறைந்தது போன்று தெரியவில்லையா?

உங்கள் தொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமானால், அதற்கு உடற்பயிற்சிகள் மட்டுமின்றி, கொழுப்புச் செல்களைக் கரைக்க உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பானங்களையும் பருக வேண்டும். இங்கு அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெற உதவும் ஓர் அற்புத ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புச் செல்களைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெற உதவும்.

இஞ்சி
இஞ்சியில் உள்ள பாலிஃபீனால்கள், உடலின் மெட்டபாலிச அளவை அதிகரித்து, வேகமாக உடல் எடை குறைய உதவி புரியும்.

தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் – 1/2 கப்
இஞ்சி சாறு – 2 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை:
ஒரு கப்பில் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் மற்றும் இஞ்சி சாற்றினை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொண்டால், பானம் தயார்.

குடிக்கும் முறை:
இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி குறைந்தது 1 மாதம் குடித்து வந்தால், நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும். குறிப்பாக இந்த பானத்தில் சர்க்கரை சேர்க்கக்கூடாது.

குறிப்பு:
அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க இந்த பானத்தைக் குடிக்கும் போது, கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவதுடன், தினமும் குறைந்தது 40 நிமிட உடற்பயிற்சியை செய்து வர வேண்டியது அவசியம்.drinking juice 21 1484981427

Related posts

தொப்பையை குறைக்கும் இயற்கை மருத்துவம்

nathan

தொப்பையை குறைக்க சில புத்திசாலித்தனமான ஐடியாக்கள் – brilliant ways get flatter belly

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த ஒரு பழத்தில் டீ போட்டு குடிங்க! கரையாத கொழுப்பும் வேகமாக கரையும்…

nathan

தொப்பை குறைய பயிற்சி (beauty tips in tamil)

nathan

உங்களால் ஏன் தொப்பையைக் குறைக்க முடியவில்லை என்று தெரியுமா?

nathan

உங்களால் ஏன் தொப்பையை குறைக்க முடியவில்லை என்று தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா 10 நாட்களில் தொப்பையை குறைக்க இந்த ஒரு பழம் மட்டும் போதுமே

nathan

தொப்பை மற்றும் பித்தம் நீக்கும் அன்னாசிப்பழம்

nathan

தொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்… 5 பழங்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan