24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201701211303073861 Urad dal kanji SECVPF
​பொதுவானவை

சத்தான சுவையான உளுந்து கஞ்சி

உளுந்தம் பருப்பில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அனைத்து வயதினருக்கும் ஏற்ற சத்தான உளுந்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான உளுந்து கஞ்சி
தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 1/2 கப்,
உளுந்து – 1/2 கப்,
தண்ணீர் – 7 கப்,
பூண்டு (சிறியது) – 30 பல்,
தேங்காய்ப்பால் – 1 கப்,
உப்பு – தேவைக்கு.

செய்முறை :

* குக்கரில் உளுந்தை போட்டு வாசனை வரும் வரை வறுத்து, அதில் 5 கப் தண்ணீர், பச்சரிசி, உப்பு, பூண்டு சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் 8 விசில் வரும்வரை வேக விடவும்.

* 2 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும்.

* பிரஷர் போனதும் குக்கரைத் திறந்து 2 கப் கொதிக்கும் தண்ணீரை சேர்த்துக் கலக்கவும்.

* பிறகு 1 கப் தேங்காய்ப்பால் சேர்த்துக் 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்றாக கலந்து சூடாக பரிமாறவும்.

* சத்தான சுவையான உளுந்து கஞ்சி ரெடி.201701211303073861 Urad dal kanji SECVPF

Related posts

மட்டன் ரசம்

nathan

ஸ்வீட் கார்ன் புலாவ்

nathan

தவா பன்னீர் மசாலா

nathan

vegetables in tamil : தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காய்கறி பெயர்கள்

nathan

காராமணி சுண்டல்

nathan

பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள்

nathan

எளிமையான மிளகு ரசம்

nathan

சுவையான சத்தான மொச்சை சுண்டல்

nathan

சளி, இருமலுக்கு மருந்தாகும் திப்பிலி ஸ்பெஷல் ரசம்

nathan