32.7 C
Chennai
Sunday, Feb 23, 2025
201701211519058799 homemade mixed fruit jam SECVPF
ஜாம் வகைகள்

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்

வீட்டிலேயே விருப்பமான பழங்களை வைத்து ஜாம் செய்து சாப்பிடலாம். இப்போது எளிய முறையில் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் செய்வது என்று பார்க்கலாம்.

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்
தேவையான பொருட்கள் :

ஆப்பிள் – 5
பப்பாளி – 1
திராட்சை – 1 கிலோ (விதை இல்லாத திராட்சை)
வாழைப்பழம் – 3
ஸ்ட்ராபெர்ரி – 8
அன்னாசி – 1 (சிறியது)
எலுமிச்சை சாறு – 1 1/2 டீஸ்பூன்
சிட்ரிக் ஆசிட் – 6-7 டீஸ்பூன்
சர்க்கரை – 1 கிலோ
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* அன்னாசி மற்றும் பப்பாளியின் தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* ஆப்பிளை தோல் சீவாமல் நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய அன்னாசி, பப்பாளி மற்றும் ஆப்பிள் பழங்களைப் போட்டு, 10 நிமிடம் வேக வைத்து, இறக்க வேண்டும். அதன் பின்பு ஆப்பிளின் தோலை நீக்கிவிடவும்.

* மிக்ஸி/பிளெண்டரில் திராட்சை, எலுமிச்சை சாறு, ஆப்பிள், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் மற்றும் அன்னாசி சேர்த்து நன்கு கூழ் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அடிகனமான வாய் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள கூழ், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, கெட்டியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

* அடுத்து அதில் சிட்ரிக் ஆசிட் சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து, கெட்டியானதும் இறக்க வேண்டும்.

* அப்போது கலவையானது நீர்மமாக இல்லாமல் கெட்டியாக இருந்தால், ஜாம் ரெடியாகிவிட்டது என்று அர்த்தம்.

* பின்னர் அதனை ஒரு காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, அறைவெப்ப நிலையில் குளிர வைத்து, பின்பு அதனை குளிர்சாதன பெட்டியில் குளிர வைக்க வேண்டும்.

* இப்போது சுவையான மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் ரெடி!!!

* விதை இல்லாத திராட்டை கிடைக்காவிட்டால் திராட்சையில் உள்ள விதைகளை எடுத்து விட்டும் செய்யலாம்.201701211519058799 homemade mixed fruit jam SECVPF

Related posts

குழந்தைகளுக்கான அன்னாசி பழ ஜாம்

nathan

பேரீச்சம் பழ ஜாம்: செய்முறைகளுடன்…!

nathan

பீநட் பட்டர்

nathan

வீட்டிலேயே செய்திடலாம் ஆப்பிள் ஜாம்!

nathan

மிகவும் சுவையான தக்காளி சாஸ் வீட்டிலேயே!…..

sangika

அன்னாசிப் பழ ஜாம்

nathan