27.5 C
Chennai
Friday, May 17, 2024
201609291412374855 how to make Pineapple jam SECVPF
ஜாம் வகைகள்

குழந்தைகளுக்கான அன்னாசி பழ ஜாம்

குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் அன்னாசி பழ ஜாம் செய்யலாம்.

குழந்தைகளுக்கான அன்னாசி பழ ஜாம்
தேவையான பொருட்கள் :

அன்னாசிப் பழம் – 1 (நடுத்தர அளவு)
சர்க்கரை – 2 கப்
மஞ்சள் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
எலுமிச்சை சாறு – 2 மேஜைக்கரண்டி
அன்னாசி எசன்ஸ் – 1 தேக்கரண்டி

செய்முறை :

* அன்னாசிப் பழத்தின் மேல் மற்றும் கீழ் முனையை வெட்டி விட்டு, தோலை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* அன்னாசி துண்டுகளை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்.

* சர்க்கரை கரைந்த உடன் அதில் பின் ஃபுட் கலர், அரைத்து வைத்துள்ள அன்னாசி விழுதை சேர்த்து கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.

* சிறிது கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். அடுத்து அதில் அன்னாசி எசன்ஸ் சேர்க்கவும்.

* சற்று கொட்டியானதும் தீயை அணைத்து விட்டு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு நன்கு கிளறவும்.

* இதனை சிறிது நேரம் குளிர வைத்து ஆறியதும் அதனை காற்றுப் புகாத டப்பாவில் மூடி வைத்து பயன்படுத்தலாம்.201609291412374855 how to make Pineapple jam SECVPF

Related posts

மிகவும் சுவையான தக்காளி சாஸ் வீட்டிலேயே!…..

sangika

வீட்டிலேயே செய்திடலாம் ஆப்பிள் ஜாம்!

nathan

பேரீச்சம் பழ ஜாம்: செய்முறைகளுடன்…!

nathan

பீநட் பட்டர்

nathan

வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்

nathan

அன்னாசிப் பழ ஜாம்

nathan