ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் எந்த கடனை வைத்துக் கொள்கிறானோ இல்லையோ, காலை கடனை மட்டும் அவனோடு வைத்துக் கொள்ள கூடாது. ஏனெனில், இது அவனை மட்டுமில்லாது அவனை சுற்றி இருப்பவர்களையும் முகம் சுளிக்கும் படி செய்துவிடும்.
அனைவரும் தான் தினமும் காலை கடனை கழிக்க போகிறார்கள். ஆனால், நீங்கள் மலம் கழிப்பதை வைத்தே உங்கள் உடலில் என்ன கோளாறு என கண்டுபிடித்துவிடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
மற்றும் நல்ல முறையில் நீங்கள் மலம் கழிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொருவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்….
வடிவம் நீங்கள் மலம் கழிக்கும் போது அது பாம்பு போன்ற வடிவத்தில் இருக்க வேண்டியது அவசியம். அவ்வாறு இல்லையெனில், உங்கள் வயிற்றில் அமில குறைப்பாடு இருக்கிறது என அர்த்தம்.
சுலபமாக இருக்கிறதா??? மலம் கழிக்கும் போது நீங்கள் சுலபமாக உணர வேண்டும். சிலர் எல்லாம், உள்ளே சென்று என்ன முக்குனாலும் வராது. இப்படி தொந்தரவாக இருந்தால், உங்கள் உடலில் நீரின் அளவு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். பொதுவாக நல்ல உடல்நிலையில் இருப்பவருக்கு மலம் கழிக்க ஐந்து நிமிடங்கள் தான் ஆகுமாம்.
ஓர் நாளுக்கு எவ்வளவு முறை?? மலம் என்பது நமது உடலில் இருந்து வெளியற்றம் செய்யப்படும் கழிவு. ஓர் நாளுக்கு குறைந்தது இரண்டு முறையாவது நீங்கள் மலம் கழிக்க வேண்டும்.
மொத்தமாக கழித்துவிட வேண்டும் நீங்கள் மலம் கழித்த பிறகு ஃப்ரீயாக உணர வேண்டும். அப்போது தான் உங்கள் குடல் இயக்கம் நல்ல முறையில் இருக்கிறது என்று அர்த்தம். இல்லையேல் உங்கள் உடல்நிலை அல்லது குடல் இயக்கத்தில் ஏதேனும் கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.
நல்ல முறையில் மலம் கழிக்க நார்ச்சத்து உணவுகளை அதிகம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால், உங்கள் செரிமானம் நல்ல முறையில் நடக்கும். இது சரியாக நடந்தாலே, மலம் கழிப்பதில் எந்த பிரச்சனையும் வராது! அதே போல, தினமும் அதிகம் தண்ணீர் குடியிங்கள், குறைந்தது 8 டம்ளர் தண்ணீராவது பருக வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கொழுப்பு உணவுகள் முக்கியம் நல்ல முறையில் மலம் கழிக்க, உங்கள் உடலில் நல்ல கொழுப்பு சத்தும் (எச்.டி.எல்) தேவை. ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றில் நல்ல கொழுப்பு சத்து இருக்கிறது. உங்கள் உணவில் இந்த எண்ணெய்களை சேர்த்துக் கொள்வது உங்கள் உடலுக்கு பலவகையில் நன்மை விளைவிக்கும்.