28.5 C
Chennai
Sunday, Dec 29, 2024
08 1436354594 1healthyfoodswapsforweightloss
எடை குறைய

உடல் எடை குறைக்க விரும்புவோருக்கான மாற்று உணவுகள்!!!

08 1436354594 1healthyfoodswapsforweightloss
இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களது காதலர்களுக்கு கூட எளிதாக "குட்-பை" சொல்லிவிட முடிகிறது. ஆனால், தங்களது தொப்பைக்கு "குட்-பை" சொல்வது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. எத்தனையோ டயட்டுகள், பயிற்சிகள்.., இருந்தும் உங்களால் உடல் எடையை குறைக்க முடியவில்லையா? கவலையை விடுங்கள்.

நீங்கள் இப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவுகளுக்கு மாறாக, மாற்று உணவாக இந்த உணவுகளை சாப்பிடுங்கள், நிச்சயமாக உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும்….

சர்க்கரைக்கு பதிலாக தேன்

இனிப்பு யாராலும் தடுக்க முடியாத உணவு. ஆனால் இது உடல் எடையை என வந்த பிறகு நீங்கள் சர்க்கரையை தவிர்த்து தான் ஆக வேண்டும். இதற்கு மாற்று உணவாக நீங்கள் தேனை சாப்பிடலாம். தேனை நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கூட உடல் எடை குறையும் என்பது நம்ம ஊர் பாட்டி வைத்தியம்.

கிரீம் உணவிற்கு பதிலாக தயிர்

இன்று கிரீம் உணவுகள் சாப்பிடும் பழக்கம் பெரும்பாலும் அனைவரிடமும் இருக்கிறது. உடல் எடை அதிகரிக்க இதுவும் ஓர் காரணமாக விளங்குகிறது. எனவே, இதற்கு மாற்றாக நீங்கள் தயிரை சாப்பிடலாம். ஆனால், வீட்டில் தயாரித்த சுத்தமான தயிர். சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான தயிர்களில் ஃப்ளேவர்கள் மற்றும் செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதுவும், உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

எனர்ஜி ட்ரிங்க்ஸ் மாற்றாக இளநீர்

உடலியக்க சக்தியை அதிகரிக்க கட்டாயம் நமக்கு ஓர் எனர்ஜி ட்ரின்க் வேண்டும். ஆனால் இரசாயன கலப்பு உள்ள பூச்சிக்கொல்லி அல்ல இயற்கை பானமான இளநீர். எனர்ஜி ட்ரிங்கில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் உடல்நலத்திற்கு தீங்கானது.

காபிக்கு பதிலாக கிரீன் டீ

அதிகமாக காபி குடிப்பது உடலுக்கு தீங்கானது. ஆனால், கிரீன் டீ உடலுக்கும் நல்லது, உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

உருளைக்கிழங்கு மாற்று உணவாக சர்க்கரைவள்ளி

கிழங்கு உருளைக்கிழங்கு வாயுப் பிரச்சனை மற்றும் உடல் எடையை அதிகரிக்கும் பண்புடையது. ஆனால், சர்க்கரைவள்ளி கிழங்கு உடல் எடை குறைக்கவும் உதவும், உங்கள் கல்லீரலுக்கும் சக்தி கொடுக்கும் தன்மையுடையது.

மைதா பிரெட்க்கு மாற்றாக கோதுமை பிரெட்

மைதா பிரெட்டில் சத்து என ஏதும் இல்லை, மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடவே கூடாது. ஆனால், கோதுமை பிரெட்டில் நிறைய நார்ச்சத்து இருக்கிறது. இது உடல் எடை குறைக்கவும் உதவும்.

ஐஸ்கிரீம் களுக்கு பதிலாக பழங்கள்

ருசிக்காக ஐஸ் கிரீம் சாப்பிடுவதை தவிர்த்து உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் பழங்களை சாப்பிடலாம்.

சாதாரண எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் இதயத்திற்கும் நல்லது உடல் எடையை குறைக்கவும் உதவும். எனவே, உடல் எடை பிரச்சனை உள்ளவர்கள் சாதாரண எண்ணெய் அல்லது காய்கறி எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்து இனி ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.

Related posts

தினமும் 200 கலோரிகளை குறைக்க வேண்டுமா..?எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

உங்க எடை கூடிக்கிட்டே இருக்கா..?

nathan

உடல் எடையை எளிமையாக குறைக்க இந்த ஒரு சுவையான ஜீஸ் போதும்!இதை முயன்று பாருங்கள்

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! 7 நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிய இத ஃபாலோ பண்ணுங்க…

nathan

பட்டினி கிடந்தால் உடல் எடை குறையாது

nathan

எடை இழக்க சிறந்த 9 பயனுள்ள வழிகள்

nathan

ஸ்லிம்மான இடைக்கு……

nathan

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்

nathan

உங்களுக்கு ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா..? இதை முயன்று பாருங்கள்

nathan