28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
21 1440136405 3 farm
மருத்துவ குறிப்பு

ஏன் அக்கால ஆண்களுக்கு வயாகராவின் அவசியமே இருந்ததில்லை என்பதற்கான காரணங்கள்!

இன்றைய உலகில் பலரும் தவறாகப் பயன்படுத்தும் ஒரு போதை மருந்து என்னவென்று தெரியுமா? அது தான் வயாகரா. இதில் மிகவும் வருத்தமான ஓர் விஷயம் என்னவெனில், இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் இதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது தான். ஆண்கள் ஏன் வயாகராவைப் பயன்படுத்துகின்றனர் என்று தெரியுமா? விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்க, உடலுறவில் உச்சம் காண, ஆண்மையை அதிகரிக்க, படுக்கையில் சிறப்பாக விளையாடிடத் தான்.

சர்வே ஒன்றில் 85% ஆண்கள் படுக்கையில் பிரச்சனை இருப்பதால் பயன்படுத்துகின்றனர் என்றும், எஞ்சிய 15% ஆண்கள் பிரச்சனை ஏதும் இல்லாமடல், வெறும் இன்பத்தை அனுபவிப்பதற்காக பயன்படுத்துகின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது. உங்களுக்கு ஒன்று தெரியுமா உண்மையிலேயே வயாகராவைப் பயன்படுத்தினால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சொல்லப்போனால் வயாகரா தற்காலிக சந்தோஷத்தை வழங்கினாலும், அது சந்தோஷமான வாழ்க்கைக்கு உலை வைத்துவிடும்.

ஆனால் நல்ல ஆரோக்கியமாக வாழ்க்கை வாழ்ந்து வந்தால், வயாகராவை பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை என உடல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதே சமயம் அக்காலத்தில் ஆண்கள் வயாகராவின் பயன்பாடு இல்லாமலேயே படுக்கையில் சிறப்பாக செயல்பட, அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தான் காரணம் என்று சர்வே ஒன்று கூறுகிறது.

அப்படி என்ன ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஆரோக்கியமான உணவுகளை உண்டனர் இக்காலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாகவும், ஆரோக்கியமான உணவுகளை குறைவாகவும் சாப்பிடுவதால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஆனால் அக்காலத்தில் தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட சுத்தமான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தனர்.

நல்ல தூக்கத்தை மேற்கொண்டனர் அக்காலத்தில் ஆண்கள் அதிகாலையில் வேகமாக எழுந்து, இரவு உணவை முடித்து சீக்கிரம் தூங்க சென்றனர். ஆனால் இன்றோ பார்ட்டி, வேலை என்று இரவில் சாப்பிடவே நடுராத்திரி ஆகிவிடுகிறது. பின் எங்கு நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்வது.

தோட்டத்தில் கடுமையாக வேலை செய்தனர் அக்காலத்தில் எல்லாம் உடல் உழைப்பு இருந்ததால், ஆண்களின் உடலில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தது. ஆனால் இன்றைய காலத்திலோ நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தவாறே வேலை செய்வதால், உடலில் பிரச்சனைகள் சீக்கிரம் வருகிறது.

ஜங்க் உணவுகளை உண்டதில்லை அக்கால ஆண்கள் ஜங்க் உணவுகளை கொடுத்தாலும், விரும்பி சாப்பிட்டிருக்கமாட்டார்கள். அப்படியே சாப்பிட்டாலும், அவர்களின் உடல் உழைப்புமிக்க வேலையால் கொழுப்புக்கள் சேராமல் இருக்கும். ஆனால் இக்காலத்தில் உட்கார்ந்து வேலை செய்வதோடு, ஜங்க் உணவுகளை உட்கொண்டு, கொழுப்புக்கள் இரத்த நாளங்களில் ஆங்காங்கு தேங்கி, இரத்த ஓட்டத்திற்கு தடையாக உள்ளன. இதனால் முக்கிய உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை.

மன அழுத்தமே அனுபவித்தது இல்லை உங்கள் தாத்தாக்கள் கடுமையான வேலையை செய்தாலும், அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு மன அழுத்தம் என்றால் என்னவென்றே தெரிந்திருக்காது. ஆனால் இக்காலத்தில் மன அழுத்தம் தான் அமைதியாக இருந்து ஆண்களின் ஆண்மையைப் பறிக்கிறது.

தினமும் பல மைல் தூர நடை அக்காலத்தில் ஆண்கள் எந்த ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமானாலும், நடந்து சென்றார்கள். மேலும் அப்போதெல்லாம் ஒவ்வொரு இடமும் பல மைல் தூரத்தில் இருக்கும். அப்படி பல மைல் தூரம் நடந்ததால், அவர்களின் உடலில் கெட்ட கொழுப்புக்கள் தங்குவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் இப்போதுள்ள ஆண்களோ பக்கத்து தெருவில் உள்ள கடைக்கு செல்ல வேண்டுமானால் கூட பைக் அல்லது காரில் தான் செல்கிறார்கள்.

வயிறு நிறைய சாப்பிடமாட்டார்கள் நம் முன்னோர்கள் எப்போதும் ஓர் உணவுக் கொள்கையை பின்பற்றினர். அது என்னவெனில் வயிறு நிறைய சாப்பிடமாட்டார்கள். முக்கால்வாசி வயிறு நிறைந்ததும் நிறுத்திக் கொள்வார்கள். இதனால் செரிமானம் சீராக நடைபெறுவதோடு, உடல் பருமனும் ஏற்படாமல் இருந்தது. ஆனால் இப்போது உடல் பருமனால் தான் பல ஆண்கள் அவஸ்தைப்படுகின்றனர். உடல் பருமன் இருந்தாலே, ஆண்மைத்தன்மை இழக்க வேண்டி வரும்.

பொழுதுபோக்கே தோட்டம் அமைப்பது
உடல் உழைப்பு இருக்கும்படியான பொழுதுபோக்கைக் கொண்டிருந்தால், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். முக்கியமாக பிறப்புறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் சீராக இருந்து, படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியும்.

21 1440136405 3 farm

Related posts

தெரிஞ்சிக்கங்க…தூக்கமின்மையால் அவதிபடுறீங்களா?

nathan

கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியவை

nathan

வெந்தய நீர் Vs எலுமிச்சை நீர் … இதில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது?

nathan

நீர்ச்சத்து குறைவும்… பாத வெடிப்பும்..தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஆஸ்துமாவை முற்றிலும் குணமாக்க.. இந்த உணவுகளை எப்பொழுதும் சேர்த்து வாருங்கள்…!

nathan

மார்பு, மார்பு காம்புகளை எப்படி பராமரிக்க வேண்டும்?

nathan

கர்ப்பமாவதற்கு முன் அவசியம் செய்ய வேண்டிய 5 பரிசோதனைகள்

nathan

இந்த குரூப் இரத்தம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு ரொம்ப அதிகமாம்…

nathan

இந்த 10 வழிமுறைகள் உங்களை ஆக்கும் மாஸ்டர் மைண்ட்!

nathan