28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
341682 20489
மருத்துவ குறிப்பு

டாஸ்மாக் பக்கம் ஒதுங்குகிறவர்களின் கவனத்துக்கு..!

டாலர் மதிப்பு சரிந்தாலும், ஏ.டி.எம் வாசல்களில் வரிசையில் நிற்பது தொடர்ந்தாலும் ஆண்டுக்கு 20 சதவிகித வியாபார வளர்ச்சியுடன் கொடிகட்டிப் பறக்கிறது அரசு நடத்தும் மது வணிகம்… டாஸ்மாக்! குடிப்பவர்களில் 40-50 சதவிகிதம் பேர்களை கிட்டத்தட்ட நிரந்தரக் குடி அடிமைகளாக மாற்றிவரும் இந்தத் தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான், அரசு பல நலத் திட்டங்களை நடத்துவதாகச் சொல்கிறது. இந்த அவலம், உலகில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

‘கொஞ்சமாக் குடிச்சா தப்பில்லையாமே…’, `இதயத்துக்கு நல்லதாமே…’, `ஹார்ட் அட்டாக் வராதாமே…’, `கொஞ்சமே கொஞ்சமா ஆல்கஹால் இருக்கும் பீர், ஒயின் சாபிடலாம்ல?’… என சப்பைக்கட்டு கட்டி ஆல்கஹால் சுவைக்கும் சகோதர-சகோதரிகளுக்கு ஒரு முக்கியமான செய்தி… ஆல்கஹால் விகிதம் 40 சதவிகிதத்துக்கு அதிகமான விஸ்கி, பிராந்தி போன்ற ஹாட் டிரிங்க்ஸ் என்றால் `பெக்’ கணக்கு, 6.8 சதவிகிதம் ஆல்கஹால் உள்ள பீர்/ஒயின் என்றால் `மக்’ கணக்கு… இதைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், வயிற்றுக்குள் செல்லும் ஆல்கஹாலுக்கும் அது நடத்தும் அட்டூழியத்தும் எந்த வித்தியாசமும் இல்லை.

`திராட்சை ஒயினில் நிறைய பாலிஃபீனால் இருக்கிறது… அது இதயத்துக்கு நல்லதாமே’ என படித்தவர்கள்கூட சில வாதத்தை முன்வைப்பார்கள். சில உணவியல் வல்லுநர்கள் இதை ஆதரிக்கவும் செய்யலாம். ஆனால், அவர்களுக்கு எல்லாம் அதே பாலிஃபீனால்கள் பச்சைத் தேயிலையில் இருந்து கத்திரிக்காய் வரைக்கும் எத்தனையோ பொருட்களில் இருக்கிறது என்பதும் தெரியும்தானே? அதற்கெல்லாம் குரல் கொடுக்காதவர்கள், ஒயின் மீது காட்டும் கரிசனத்துக்கு, இதயம் மீதான அக்கறையா காரணம்?

341682 20489

`ஒயினை உணவுப் பட்டியலோடு சேர்க்க வேண்டும். உயர்தர சைவ உணவகம் தொடங்கி, கையேந்தி பவன் வரைக்கும் அனைத்து உணவகங்களிலும் அதை வழங்க அனுமதி வேண்டும்’ என ஒரு பெரும் வணிகக் கூட்டம் தொடர்ந்து அரசை வற்புறுத்திவருகிறது. அதாவது, பெண்களும் மது அருந்தும் பழக்கத்தை ஊக்குவித்தால், குடும்பத்தோடு குடிக்கவைத்து, மாதாந்திர மளிகைக்கடைப் பட்டியலில் ஒயினையும் இடம்பெறச் செய்யலாம் என்கிற சந்தை உத்தி. அது சரிதான் என்பதுபோல நகர்ப்புற இளம் பெண்களில் குடிப்பழக்கம் கணிசமாகப் பெருகிவருவதும் வருத்தம்தரக்கூடிய ஒன்று. ஆண்களைவிட பெண்களுக்கு மதுவினால் வரும் நோய்க் கூட்டம் 100 சதவிகிதம் அதிகம்.

`கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் ஈரல் சிர்ரோசிஸ் (Liver Cirrhoosis) நோயாளிகள் இந்தியாவில் இருக்கிறார்கள்’ என்கிறது சமீபத்திய நடத்தப்பட்ட ஓர் ஆய்வு விவரம். இதற்கு முக்கியக் காரணம் குடி. சில பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஈரல் (கல்லீரல்) துறைக்காகத் தனிப் பிரிவுகளையே உருவாக்கிவைத்திருக்கின்றன. ஏனெனில், ஈரல் பாதிப்படைந்தவர்களில் சரி பாதிப்பேர் ஈரல் புற்றுநோய்க்கும் ஆளாவார்களாம். தொடர்ச்சியாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், சிர்ரோசிஸ் நோய்க்கு `காத்திருப்பு நிலை’யில் உள்ளவர்கள்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

341922 20435

`நீங்கள் குடிப் பழக்கம் உள்ளவராக இருப்பதால், உங்கள் பிள்ளை ஈரல் வியாதியாலோ அல்லது வேறு புற்றுநோய்க்கோ அல்லது சர்க்கரை முதலான பல வியாதிகளுக்கோ ஆளாகலாம்’ என எச்சரிக்கிறது எபிஜெனிடிக்ஸ் (Epigenetics) துறையின் ஆய்வு ஒன்று. குடி போதையில் ஒரு நபர் தள்ளாடுவதுபோல, அந்த நபரின் மரபணுக்களும் தள்ளாடி, மரபணுத் தகவல்களை மிகத் துல்லியமாகப் பிரதியெடுக்கவேண்டிய பணியை மறந்துவிடுகின்றன. தன் செல்களைப் படியெடுக்கும்போது, சந்திப் பிழை, கமா, ஃபுல்ஸ்டாப் எல்லாம் வைப்பதற்கு மறந்ததில் `டி.என்.ஏ டிமெத்திலேஷன் (DNA Demethylation) நடந்து, அது குடித்தவருக்கோ, குடித்தவரின் பிள்ளைகளுக்கோ சிர்ரோசிஸ் முதல் பல வியாதிகளை வரவழைக்கக்கூடும்’ என்கிறது எபிஜெனிடிக்ஸ் துறை ஆய்வு.

‘சங்ககாலத்திலேயே கள் அருந்தியிருக்கிறார்களே!’ எனச் சிலர் கேட்கலாம். கள் வேறு; எத்தனால் கலந்து விற்கப்படும் சாராயம் வேறு. கள்ளைவிட நவீன சாராயத்தில் 10 மடங்கு எத்தனால் அதிகம். அதற்காக அந்த காலக் கள் குடிக்கலாமா என நினைப்பதும் தவறு. சங்க காலத்தில் கல் தூக்கி, காதலித்து, குமரியில் இருந்து மதுரைக்கு குதிரையில் பயணிக்க உடல் வலிமை தேவையாக இருந்தது. இப்போது பஸ்ஸில் போகவே, `ஸ்லீப்பர் ஸீட் இருக்கா?’ எனக் கேட்கும், சொகுசு தேடுபவர்களுக்கு கள் அவசியமே இல்லை.

இன்றைக்கு, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு ஆகும் செலவு பல லட்ச ரூபாய். பழுதடைந்த ஈரலைப் பராமரிக்க ஆகும் செலவு பல பத்தாயிரங்கள். குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி, மரணத் தறுவாயில் பெரிய மருத்துவமனைக்குள் நுழையவே முடியாத பாமர, ஏழை மக்கள் கூட்டம்தான் 98 சதவிகிதம். எனவே நினைவில் கொள்வோம்… குடி குடியை மட்டுமல்ல… குலத்தையே கெடுக்கும்!

Related posts

Appendix பிரச்சனைக்கு முடிவுகட்ட வேண்டுமா?

nathan

பெண்களே! உங்க அந்தரங்க பகுதியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்

nathan

எலும்புகளை காக்க பயனுள்ள வழிமுறைகள்

nathan

ஆண்-பெண் குரல் வித்தியாசம்

nathan

தெரிஞ்சிக்கங்க…கிரீன் டீ-யில் இதை மட்டும் சேர்த்து குடிங்க… நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக உயருமாம்!

nathan

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள்?அப்ப இத படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க… தைராய்டு ஏற்படுவதற்கான முழு அறிகுறிகளும்.. பாதிப்புகளும் என்னென்ன தெரியுமா?

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம்

nathan

ஹெல்த் ஸ்பெஷல் குழந்தையின்மை காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள்

nathan