28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
29 1475129889 6 lemonrinse
தலைமுடி சிகிச்சை

நரை முடி இருந்தால் என்னவெல்லாம் செய்யக்கூடாது?

இன்றைய தலைமுறையினருக்கு இளமையிலேயே நரைமுடி வந்துவிடுகிறது. இப்படி நரைத்த முடியைக் குறித்து எழும் பல கேள்விகளுக்கு, சரியான விடை கிடைத்ததில்லை. அந்த கேள்விகளுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதில்களைக் கூறுவார்கள். இதனால் குழப்பம் தான் நீடிக்கும்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை நரை முடி இருக்கும் போது செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்களைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக முடிக்கு மெலனோசைட்டுகள் என்னும் நிறமி செல்கள் தான் நிறத்தை வழங்கும். நாளாக நாளாக மெலனோசைட்டுகளின் அளவு குறைந்து, முடியை நரைக்க செய்யும். மேலும் முடி நரைப்பதற்கு மரபணுக்களும் ஓர் காரணம். அதுமட்டுமின்றி ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மன அழுத்தம், மோசமான டயட் போன்றவைகளும் காரணங்களாகும்.

சரி, இப்போது நரை முடி இருக்கும் போது செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்களைக் காண்போம்.

முடியைப் பிடுங்குதல் முடியைப் பிடுங்கினால் நரைமுடி அதிகரிக்கும் என்று கூறுவது பொய். நரைமுடியைப் பிடுங்கினால், முடி பிடுங்கிய இடத்தில் மீண்டும் நரை முடி தான் வளரும். இதைத் தான் மக்கள் தவறாக கருதியுள்ளனர்.

நரைமுடியை கண்டுகொள்ளாமல் இருப்பது நரைமுடி இருந்தால், அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சில நேரங்களில் உடலில் ஜிங்க், இரும்புச்சத்து போன்றவற்றின் குறைபாடுகளினாலும் முடி நரைக்கலாம். எனவே நரை முடி உள்ளவர்கள், ஜிங்க், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டு, நரைமுடியைப் போக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

புகைப்பிடித்தல் நரைமுடி வரை ஆரம்பித்தால் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். ஏனெனில் சிகரெட் முதுமைத் தோற்றத்தை விரைவில் வரச் செய்வதோடு, மெலனின் நிறமி செல்களின் அளவை பாதித்து, மயிர்கால்களை வலிமையிழக்கவும் செய்யும். எனவே புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், உடனே அதைக் கைவிடுங்கள்.

தினமும் தலைக்கு குளிப்பது தினமும் தலைக்கு குளிப்பதால், முடியில் உள்ள இயற்கை எண்ணெய் வெளியேறி, முடி வெடிக்க ஆரம்பிக்கும். மேலும் இது நரை முடியையும் பாதிக்கும். எனவே தினமும் தலைக்கு குளிக்காமல், வாரத்திற்கு 2-3 முறை மட்டும் தலைக்கு குளியுங்கள்.

அம்மோனியா டை நரைமுடியை மறைக்கிறேன் என்று அம்மோனியா கொண்ட ஹேர் டை உபயோகிக்கும் பழக்கத்தை உடனே விட வேண்டும். இந்த வகையான ஹேர் டை தற்காலிக தீர்வை மட்டும் தருவதோடு, மயிர்கால்களை பாதித்து, தலைமுடியை அதிகம் உதிரச் செய்யும்.

எலுமிச்சை நீர் உபயோகிக்கவும் தலைக்கு ஷாம்பு போட்டு குளித்த பின், 1/4 கப் எலுமிச்சை சாற்றில் 2 கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து, தலைமுடியை அலச வேண்டும். இதனால் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், மெலனின் என்னும் நிறமி செல்களை தக்க வைத்து, நரைமுடியைத் தடுக்கும்.

29 1475129889 6 lemonrinse

Related posts

ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் கூறும் தகவல்கள்

nathan

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டுமா…..

sangika

உங்க இளநரையை போக்கும் ஹென்னா ஆயில் !

nathan

தலைமுடியில் வெடிப்பு ஏற்பட்டு முடி வளராம இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பட்டுப்போன்ற மென்மையான கூந்தலைப் பெற சில எளிய வழிகள்!!!

nathan

நரை முடி கருக்க tips

nathan

கூந்தல் எலிவால் போலிருக்கிறதா? இதை யூஸ் பண்ணுங்க!!

nathan

இழந்த முடியை மீண்டும் பெற வழிகள்

nathan

படுக்கும் முன் கூந்தலை பராமரிப்பது எப்படி?

nathan