29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ஆரோக்கியம்எடை குறைய

உணவைத் தவிர்த்தாலும் எடை அதிகரிக்க என்ன காரணம்?

Hormones-Responsible-For-Weight-Gain-In-Womenஅதிக உணவு எடுத்துக்கொள்வதால் மட்டுமல்ல, அந்தந்த வேளை உணவை ‘ஸ்கிப்’ செய்தாலும்கூட.. ரத்த சோகை, ஒபிஸிட்டி வரக்கூடும்.

இளம் பெண்களில் அதிகமானோர் காலை உணவைத் தவிர்ப்பதால் எளிதில் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால், சாதரண நோய் தொடங்கி… குழந்தை பாக்கியம் இல்லாமை வரை பலவித பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.

பூப்பெய்திய பெண் குழந்தைகளுக்குத் தரப்படும் உளுத்தங்களி போன்ற பாரம்பர்ய உணவுகள், ரத்த விருத்திக்கு தேவையான ஊட்டச்சத்தை தரவல்லவை. ஆனால், இன்றைய டீன் ஏஜினரோ… காலை எழுந்தவுடனே பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிடவே விரும்புகின்றனர்.

உயரத்துக்கேற்ற எடை அவசியம்..!

ஒருவரின் சரியான எடையைக் கண்டறிய ஓர் எளிய வழி. உயரம் (செ.மீ)  100  = சராசரி எடை (கிலோவில்). அதேபோல், ஒருவரின் பி.எம்.ஐ (BMI-Body mass Index) 24-க்கு மேல் இருந்தால், அவர் ‘உடல் பருமன்’ வகையில் சேருவார். அதாவது, ஒருவரின் எடை (கிலோ) / உயரம் (மீ)2 = பி.எம்.ஐ. உதாரணமாக, உங்கள் மகளின் எடை 45 கிலோ, உயரம் 155 செ.மீ என்றால், 45 / (1.55ஜ்1.55) = 18.7. உங்களது மகள் ஆரோக்கியமான எடையில் இருக்கிறார் என்று அர்த்தம்.

p64

குறிப்பு: சென்ற தலைமுறையில் செப்பு மற்றும் மண்பானையில் வைத்து தண்ணீர் குடித்தார்கள். அதனால், அதில் உள்ள தாதுப்பொருட்கள் உடலில் சேர்ந்து கருமுட்டை மற்றும் கருப்பை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. இன்றோ, பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் வைத்து அருந்துவதால்… அதில் உள்ள ஸினோ ஈஸ்ட்ரோஜென்’ (Xeno Estrogen) எனும் வேதிப்பொருள், ரத்தத்தில் உள்ள இயற்கையான ஈஸ்ட்ரோஜென்னை வேலை செய்ய விடாமல் தடுத்து, கருமுட்டை வளர்ச்சியின்றி சினை உறுப்பில் நீர்க்கட்டிகள் ஏற்பட வாய்ப்பாகிறது. இதை, பாலிசிஸ்டிக் ஓவரி டிசீஸ்’ (Polycystic Ovary Disease) என்று சொல்லுவார்கள். இந்த பிசிஓடி, அதிகமான உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய்க் குளறுபடிகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

Related posts

உங்களுக்கு சட்டென்று உடல் எடையை குறைக்க வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan

பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

nathan

இரவில் தூங்காவிட்டால் ஏற்டும் பிரச்சனைகள்

nathan

வயிறை தட்டையாக வைத்திருக்க இத செய்யுங்கள்!….

sangika

* எடை கூட காரணங்கள்: *

nathan

இது உண்பதற்கு சுவையாக இருந்தாலும் அதிகமாக உட்கொள்ளும்போது உடலுக்கு தீங்கையே விளைவிக்கும்!..

sangika

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை!

nathan

சர்க்கரை நோய்க்கு தீர்வு தரும் ஆயுர்வேத மருந்துகள்!…

sangika

ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் வருவதை அதிகமாக இருப்பதை பார்க்கிறோம்.

nathan