சருமத்தில் முகப்பரு போன்று கொப்புளங்களும் உருவாகும். அவற்றில் சீழ் அல்லது நீர் போன்று திரவம் வெளிப்படும்.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் பரவக் கூடிய இந்த கொப்புளங்கள் நம் அழகை கெடுப்பது போல அமையும். அதே சமயம் வலியும் தாங்கமுடியாதபடி இருக்கும்.
ஏன் இந்த கொப்புளம் வருகிறது ? காயம் அல்லது சரும மயிர்கால்களின் துவாரங்கள் வழியாக பேக்டீரியா ஊடுருவி, உள்ளே செல்கிறது. அங்கே நோய் எதிர்ப்பு செல்கள் கிருமியை விரட்டும்போது உண்டாகும் வீக்கமே கொப்புளமாக தென்படுகிறது. இந்த கொப்புளங்களில் சீழ் பிடித்து வீக்கத்தையும் வலியையும் தருகிறது.
பால் : ஒரே ஒரு பொருள் உங்கள் கொப்புளங்களை மறையச் செய்யும் ஆற்றல் கொண்டது. எது தெரியுமா? பால். பாலில் விட்டமின் பி, லாக்டிக் அமிலம், புரோட்டின் ஆகியவை உள்ளது. இது அழமாக இருக்கும் அழுக்கு, கிருமிகளையும் வெளியகற்றும். இனி எப்படி கொப்புளங்களை மறையச் செய்வது என பார்க்கலாம்.
செய்முறை – 1 ஒரு கப் பாலை காய்ச்சுங்கள். ஆறிய பின் எடுத்துக் கொள்ளுங்கள். ஆறிய பாலில் 3 டேபிள் ஸ்பூன் உப்பை போடுங்கள்.
செய்முறை-2 பின்னர் அதில் பிரட் தூளை சேர்க்கவும்
செய்முறை-3 பின் இந்தன் கலவையை பேஸ்ட் போல் நன்றாக கெட்டியாக கலக்கவும்.
உபயோகிக்கும் முறை : இந்த விழுதை கொப்புளம் இருக்கும் பகுதியில் போடுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவவும். இது போல் பல முறை ஒரே நாளில் செய்யலாம். கொப்புளம் வேகமாக ஆறி அங்கே சருமம் புதுப் பொலிவுடன் இருப்பதை கவனிப்பீர்கள்.