28.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
sl4471
சைவம்

அப்பளக் கறி

என்னென்ன தேவை?

பொரித்த அப்பளம் – 10,
பொடித்த வெங்காயம் – 2,
கெட்டித் தயிர்-1/2 கப்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்,
தனியாத் தூள் – 1 1/2 டேபிள்ஸ்பூன்,
பூண்டு பல் – 6,
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – தேவைக்கு,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு, மல்லித்தழை – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பெருங்காயம், பொடித்த பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொரிந்ததும் 1/2 கப் தண்ணீரில் தனியாத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து எண்ணெயில் வதங்கிக் கொண்டிருக்கிற வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். மசாலாக்கள் வதங்கி எண்ணெய் மேல் வந்ததும் தயிரை அடித்து கலவையில் சேர்த்து திரியாமல் கலக்கவும். ஒரு கொதி வந்ததும், அப்பளத்தை உடைத்து சேர்த்து மல்லித்தழை தூவி இறக்கி சூடாக நாண், ரொட்டி, புரோட்டா, சாதம், புல்காவுடன்
பரிமாறவும்.

குறிப்பு: மசாலா அப்பளத்தை சுட்டோ, பொரித்தோ, மைக்ரோவேவ் அவனில் வாட்டியோ செய்யலாம். குழந்தைகளுக்கு மசாலா அப்பளம் வேண்டாம்.sl4471

Related posts

கொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma

nathan

சுவையான வேர்க்கடலை குழம்பு

nathan

சேனைக்கிழங்கு சாப்ஸ்

nathan

வாழைத்தண்டு சாதம்

nathan

சுவையான புளியோதரை செய்வது எப்படி

nathan

ஆரஞ்சு தோல் குழம்பு

nathan

சூப்பரான தக்காளி தேங்காய் பால் சாதம்

nathan

பிர்னி

nathan

கொப்பரிக்காய வங்காய சிண்டசெட்டு புளுசு

nathan